உன் படத்துல நடிச்சு என் மகன மூலையில் உட்கார வைக்கவா?.. சூர்யாவின் கால்ஷீட் கேட்ட இயக்குனரை கேவலப்படுத்திய சிவகுமார்..
தமிழ் சினிமாவில் கலைக் குடும்பமாக கௌரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபலங்கள் சிவகுமார் குடும்பம். சூர்யா, கார்த்தி என சிங்கம் , சிறுத்தைகளை பெற்ற பெரிய மகான். பிரபலங்கள் மத்தியில் மிகவும் கௌரமாக கருதக்கூடிய ஒரு உன்னதமான நடிகர் தான் சிவக்குமார்.
சூர்யா இப்பொழுது சமூகம் சார்ந்த கதைகளில் நடித்து சமுதாயத்தில் தலை நிமிர்ந்து பார்க்கக் கூடிய நடிகராக வலம் வருகிறார். அந்தப் பக்கம் கார்த்தி தனக்கே உரித்தான எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறார். மேலும் டைரக்ஷனிலும் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார் கார்த்தி.
இருவரும் படு பிஸியாக சினிமாவில் கோலோச்சி வருகிறார்கள். இத்தனை பெருமைக்குரிய மகன்களை பெற்ற சிவக்குமாரிடம் ஒரு இயக்குனர் சூர்யாவின் கால்ஷீட்டை கேட்க போய் தலைகுனிந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சினிமாவில் பிரபல இயக்குனராக எழுத்தாளராக இருந்தவர் ஜெயபாரதி.
கலைப்படங்களை இயக்குவதில் வல்லவர். கமெர்சியல் படங்களையும் தாண்டி வாழ்க்கையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை தன்னுடைய இயக்குனர் கலைத்திறனுக்கு ஏற்ப வடிவமைப்பதில் வல்லவர் ஜெயபாரதி. இவரின் ‘குடிசை’ என்ற திரைப்படம் ஏகப்பட்ட விமர்சனங்களையும் தாண்டி சேர வேண்டியவர்களிடம் போய் சேர்ந்தது.
மேலும் தமிழ் நாட்டில் கிடைக்காத அங்கீகாரம் மற்ற மாநிலங்களில் கிடைத்தது என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் வார்த்தையால் வசைப்பாடினார் ஜெயபாரதி. அப்போது தான் தன்னுடைய கதைக்காக சிவக்குமார் வீட்டிற்கு சென்று சூர்யா என் படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம்.
அதற்கு சிவக்குமார் ஏன்? உன் ஆர்ட் ஃப்லிம்ல நடிச்சு அவன் மூலையில உட்காருவதற்கா? போய் வேலையை பாரு, அவன் நடிச்சால் அவன் மார்கெட் போய்விடும் என்று சொல்லி அனுப்பி விட்டாராம் சிவக்குமார். இதை மேற்கோளிட்டு காட்டிய ஜெயபாரதி என் படத்துல் நடிக்க விருப்பம் இல்லையெனில் வெளிப்படையாகவே கூறியிருக்கலாம், ஆனால் இப்படி நாகரீகம் அற்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டாம் என்று ஒரு பேட்டியில் கூறினார்.
இதையும் படிங்க : இவ்வளவு காசு கொட்டுன்னா இனி எப்படி படம் எடுப்பாரு… மிஷ்கினுக்கு அடித்த லாட்டரியை பாருங்கப்பா!!