Connect with us

Cinema History

ஹேராம் படத்துல இப்படி ஒரு டெக்னாலஜியா…எப்படி இதெல்லாம் முடிஞ்சது…?! ஒளிப்பதிவாளர் திரு சொல்லும் ஆச்சரியங்கள்..!

ஒளிப்பதிவாளர் திரு என்ற திருநாவுக்கரசு தனது திரை உலக அனுபவங்களை இவ்வாறு பகிர்கிறார்.

இயற்கையில் இருக்கும் சூரிய ஒளியானது அனைத்தும் நாம் விரும்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டே உள்ளது. ஆனால் அதை நாம் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். ஹேராம் படத்தில் கமல் திரைக்கதையை ஆழமாக எழுதியிருப்பார்.

Thiru

அதைப் படித்துப் பார்த்த உடனே எனக்கு ஷாக்கா இருந்தது. எனக்கு அது பர்ஸ்ட் பீரியடு பிலிம். இந்தியாவிலேயே முழுமுதல் பீரியடு படமும் அதுதான். அந்தப்படத்துல நீலக்கலரே வராதவாறு ஒளிப்பதிவு இருக்கும். ப்ளூ வந்து ஸ்ட்ராங்கான கலர் இல்ல. அது ஈசியா நாம பார்க்கலாம்.

Heyram11

அதே நேரம் ஈசியா மறைஞ்சிடும். அந்த மாதிரி ஒரு கலர் அது. அதனால அதுதான் இந்த படத்துல முதல்ல மறைஞ்சிடுது. அப்படி இருக்குற மாதிரி படத்துல யோசிச்சி எடுத்தேன். இதுக்கு ஒரு பிராசஸா ஒர்க் பண்ணினேன்.

ப்ளூ ஷாட் இருக்கும். ஆனா படத்துல ப்ளூ இருக்காது. அப்படி ஒரு அனலாக் மேஜிக் படத்துல இருந்தது. ப்ளூ, க்ரீன் கலர்ல சட்டை போட்டுருப்பாங்க. ஆனா அது படத்துல பார்க்க முடியாது. அது ஒரு மாதிரி டல்லா தெரியும். அதை க்ரீன், ப்ளூன்னே கண்டுபிடிக்க முடியாது.

என்ன பண்ணுனோம்னா லேபரட்டரில நிறைய பிராசஸ் செய்தேன். ஒரு கலரையே அதாவது ப்ளூங்கற சேனலையே கட் பண்ணிட்டேன். இதெல்லாம் பிராசஸ் எல்லாம் பண்ணிட்டுப் பார்த்தா ஐ எம் வெரி ஹேப்பி.

Heyram

அப்போ போட்டுக் காட்டும்போது கமல் சார் ஒரு மாதிரி இதா இருக்கு… இதுதானா பெஸ்ட் லுக்னுலாம் கேட்டாரு. இல்ல சார்…ஜஸ்ட் ட்ரான்ஸ்பர்…எடிட் பர்பஸ்…இன்னும் பைனல் வேற மாதிரி இருக்கும்ன்னு சொன்னேன். இப்படியே பல தடவை பைனல் வேற மாதிரி இருக்கும்னு சொல்லி சொல்லி பலபேருக்கும் பிரஷரா ஆயிடுச்சு.

அவங்களும் அந்த லுக் இருந்தா தான் அந்த காஸ்டியும் நல்லாருக்கும். ஆர்ட் சைடும் ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆனால் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஃபைனலா அப்போ லேபரட்டரி வைத்துதான் டிசைடு பண்ணுவாங்க.

அங்கத் தான் கன்ட்ரோல் இருக்கும். ஹேராமுக்கு தனியா ஒரு பிராசஸ் மெத்தடு…தனியா ஒரு கலரு…எல்லாத்தையும் லேப்ல சேஞ்ச் பண்ண வேண்டியிருந்தது. அவங்களும் இப்படி எல்லாம் பண்ண முடியாதுன்னாங்க. அப்போ என்ன பண்றதுன்னு தெரியல. பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட என்னோட நிலைமையை சொன்னேன்.

ரெண்டையும் தனித்தனியாக ஒரு ரீல் பிரிண்ட் பண்ண சொன்னாங்க. ரெண்டையும் தியேட்டர்ல போட்டுப் பார்த்தாங்க. பி.சி.சார் பர்ஸ்ட் என்னோட லுக்கப் பார்த்தாரு. உடனே வெளியே வந்தாரு. திரு என்ன சொல்றாரோ அதை செஞ்சு கொடுங்கன்னு சொல்லிட்டாரு. பைனல் அவுட் புட்ட கமல்சார் லேப்ல பார்க்கல.

எல்லாமே பிரியம் ஷோல தான் பார்க்குறாங்க. ஏன்னா எல்லாமே லேட்டாயிடுச்சு. நான் லேப்ல இருந்து சென்ட் பண்றேன். பிரீமியர் ஷோ நான் பார்க்கல. அவங்க எல்லாரும் பார்த்துட்டு ரொம்ப அற்புதமா இருக்குன்னு சொன்னாங்க. கலர்ஸ் ஆர் ரேர்… பட் கலர்ஸ் நாட் தேர்…னு சொன்னாங்க.

Aalavanthan

ஆளவந்தானிலும் ரொம்ப சேலஞ்சிங் இருந்தது. ஒரே ஆள்…ஒருத்தர் குண்டாவும், ஒருத்தர் ஒல்லியாவும் இருக்கணும்…தனித்தனியா 2 லேயரா எப்ப வேணாலும் சூட் பண்ணலாம்…அப்படி ஒரு பிராஜெக்ட் அது. இன்னைக்கு ஜோக்கரைக் கொண்டாடுறாங்க..அதோட இன்னொரு பார்ம் தான் ஆளவந்தான். இது யாரும் அறியாத ஒரு விஷயமாகத் தான் அப்போ இருந்தது.

இந்த சேலஞ்ச்ச எப்படி அக்சீவ் பண்றதுங்கறதுதான் எங்களோட இதா அப்போ இருந்தது. அனிமேஷன் ஒரு கலர் கொடுத்து மோஷன் ட்ராக்கிங்கா பண்ணினோம். அதுல கமல் சாரோட ஆக்ஷன், பிஹேவியரை அப்ளை பண்ணினோம். முதல்ல 3டியா எடுத்து 2டி அனிமேஷனா கன்வர்ட் பண்ணினோம். அது ரொம்ப புதுசா இருந்தது.

google news
Continue Reading

More in Cinema History

To Top