நீங்க இப்டி செய்யலாமா?! தயாரிப்பாளரை வம்பில் மாட்டிவிட்ட வெற்றிமாறன்.!

by Manikandan |
நீங்க இப்டி செய்யலாமா?! தயாரிப்பாளரை வம்பில் மாட்டிவிட்ட வெற்றிமாறன்.!
X

சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்களைக் கடந்து விட்டார் இயக்குனர் வெற்றிமாறன். ஆனால், இதுவரை இயக்கிய திரைப்படங்கள் மொத்தம் மொத்தமே ஐந்து தான். ஆனால், 5 திரைப்படங்களும் இன்னும் ஐம்பது வருடம் கடந்தும் பேசும் படியாக இருக்கும். அந்த அளவுக்கு தனது திறமையான இயக்கத்தால் அந்த படங்களை தரமானதாக கொடுத்துவிட்டார்.

அசுரன், படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் சூரி மற்றும் விஜய் சேதுபதி வைத்து புதிய படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் சூட்டிங் கொரோனா கட்டுப்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே தொடங்கப்பட்டது.

ஆரம்பிக்கும்போது 50 நாளில் மொத்த பட சூட்டிங்கை முடித்து விடலாம் என்றுதான் ஆரம்பித்தார் வெற்றிமாறன். ஆனால், தற்போது வரை படத்தின் சூட்டிங் முடியவில்லை. வெற்றிமாறன் தற்போது அதை பெரிதுபடுத்தி அதன் பட்ஜெட் முன்பு சொன்னதை விட அதிகமாகிவிட்டதாம்.

இதையும் படியுங்களேன்- விஷாலின் நாயை கண்டு பயந்து நடுங்கும் தியேட்டர் அதிபர்கள்.!

அதிகமாகி விட்டாலும் பரவாயில்லை ஆனால் படம் சூட்டிங் இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே போகிறது. இதனால், தயாரிப்பாளர் வருத்தத்தில் இருக்கிறாராம். சிறிய படம் என ஆரம்பித்து தற்போது பெரிய படமாக வந்து நிற்கிறது இந்த விடுதலை திரைப்படம். இந்த படம் எப்போது முனைந்து தயாரிப்பாளருக்கு எப்போது விடிவு காலத்தை கொடுக்கும் என பொருத்திருந்து பார்க்கலாம்.

Next Story