மயில்சாமி தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். சிறுவயதில் இருந்து எம்.ஜி.ஆரின் படங்களை அதிகம் பார்த்து வளர்ந்து வந்ததால் இவர் ஒரு தீவிர எம்.ஜி.ஆரின் ரசிகன் ஆனார். அதனால் அவருக்கு படிப்பின் மீது நாட்டம் குறைந்து நடிப்பின் மீது ஆர்வம் அதிகரித்தது. பின்னர் சென்னை வந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தார். பல குரலில் பேசி அசத்துவது அவரது தனித்திறமையாக விளங்கியது. அதன் காரணமாக இயக்குனர் பாக்கியராஜை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
அவரிடம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போன்று பேசி அசத்தி பாக்கியராஜின் மனம் கவர்கிறார். 1984 ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ”தாவணிக் கனவுகள்” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார். பின்னர் காமெடி ஜாம்பவான கவுண்டமணியிடம் நடிக்கும் வாய்ப்பை பெறுகிறார். அதனை தொடர்ந்து சிறு சிறு படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமன்றி படங்களில் அதிரடி சண்டை காட்சிகளில் வில்லன்கள் ஏற்படுத்தும் சத்தம் இவருடையதாகும். தன்னை ஒரு டப்பிங் கலைஞராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார். வெறும் சத்தத்திற்கு மட்டும் பயன்பட்ட இவரது குரல் பிற்காலத்தில் நடிகர்களுக்கு பின்னணி பேசும் குரலாக உருவெடுக்கிறது.
அதில் 1992 ஆம் ஆண்டு இயக்குனர் ஜே.பி.ராஜா ரவி இயக்கிய ”கஸ்தூரி மஞ்சள்” என்னும் திரைப்படத்தில் ”வடிவேலுக்கு” பின்னணி பேசி இருப்பார். அன்றைய காலகட்டத்தில் வடிவேலு அறிமுக காமெடி நடிகர் ஆவார். பின்னர் 1996 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான ”செல்வா” என்ற திரைப்படத்தில் ”மணிவண்ணனுக்கு” பின்னணி குரல் கொடுத்திருப்பார். இப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கிய ”வடிவேலு” மற்றும் ”மணிவண்ணனுக்கு” டப்பிங் பேசியுள்ளார் மயில்சாமி. அதுமட்டுமில்லாமல் ஒரே படத்தில் இரு நடிகர்களுக்கு அதுவும் இரு நடிகர்களின் காம்பினேஷன் காட்சிகளிலும் டப்பிங் பேசி அசத்தியுள்ளார் மயில்சாமி.
2004 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான ”நியூ” என்ற திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் வரும் ”பிரம்மானந்தம்” மற்றும் ”அலி” என இரண்டு தெலுங்கு நடிகர்கள் நடித்திருப்பார்கள். அந்த இரண்டு நடிகர்களுக்கும் டப்பிங் பேசியிருப்பார். அது மட்டுமன்றி அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் காம்பினேஷன் காட்சிகளிலும் மயில்சாமி ஒருவரே இருவருக்கும் குரல் கொடுத்திருப்பார்.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…