ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரித் சிங், யோகி பாபு, கருணாகரன், பால சரவணன், ஷரத் கேல்கர், பானுப்பிரியா மற்றும் இஷா கோபிகர் நடிப்பில் ஜனவரி 12-ஆம் தேதி வெளியான ஏலியன் திரைப்படம் அயலான் முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டி இருந்தாலும் தனுஷின் கேப்டன் மில்லர் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்கிற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கேப்டன் மில்லர் மற்றும் அயலான் என இரு படங்களுக்கும் சமமான தியேட்டர்களே ஒதுக்கப்பட்டு இருந்தன. மேலும் பொங்கல் ரிலீசாக விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜயின் மிஷன் சப்டர் 1 உள்ளிட்ட தமிழ் படங்களும் மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் மற்றும் ஹனுமான் உள்ளிட்ட படங்கள் வெளியாகின.
இதையும் படிங்க: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய தனுஷ்!.. கேப்டன் மில்லர் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..
ஏலியன் கான்செப்ட்டை வைத்து கிரீன் மேட் மேஜிக்கில் ரவிக்குமார் உருவாக்கிய இந்த படம் குழந்தைகளுக்கான படமாக உருவாகியுள்ளது. முதல் பாதி குழந்தைகளை டார்கெட் செய்தும், இரண்டாம் பாதி ஆக்சன் ரசிகர்களை டார்கெட் செய்தும் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதல் நாளில் அயலான் திரைப்படம் 4 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இருப்பதாகவும் உலகம் முழுவதும் இந்த படம் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ரஜினி விஷயத்துல அவர் பண்ணது வேறலெவல்!.. அப்பவே ஸ்கெட்ச் போட்டு வேலை பார்த்த சிவகார்த்திகேயன்..
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூலையும் உலகம் முழுவதும் 17 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டியுள்ளது.
பொங்கல் விடுமுறை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உள்ள நிலையில், அடுத்த வாரம் புதன்கிழமை வரை புதிதாக வெளியான அனைத்து படங்களும் நல்ல வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தின் வசூலை அயலான் இந்த பொங்கல் வீசில் முறியடிக்குமா என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: ரஜினி சொல்லியும் கேட்கல!.. மொத்த சீனையும் மாத்திய மகேந்திரன்!.. ஜானி படத்தில் நடந்த சம்பவம்.!..
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…