கேப்டன் மில்லர் படத்திற்காக சம்பளத்தை குறைத்த தனுஷ்?... ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை!
“வாத்தி” திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ், தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன் “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்முரமான நடந்து வரும் பணிகள்
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சமீபத்தில் இத்திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியானது. அதில் படக்குழுவினர் மிகவும் கடினமாக உழைத்து மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பது தெரியவந்தது. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
தனுஷ் சம்பளத்தை குறைத்துக்கொண்டாரா?
இதனிடையே இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவுகள் அதிகரித்ததால் தனுஷ் தனது 40 கோடி ரூபாய் சம்பளத்தை குறைத்து 20 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார் என்று ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் தனுஷின் சம்பளம் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது தனுஷ், “கேப்டன் மில்லர்” திரைப்படத்திற்காக முதலிலேயே மிகவும் குறைவான சம்பளத்திற்கே ஒப்புக்கொண்டார் எனவும் படத்தின் தயாரிப்பு செலவுகள் அதிகமானதால் அவர் தனது சம்பளத்தை 40 கோடியில் இருந்து 20 கோடியாக குறைக்கவில்லை எனவும் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: எம்.எஸ்.வியை ஐஸ் வைத்து கவிழ்த்த விவேக்… அஜித் படத்தில் நடித்ததன் பின்னணி இதுதான்… இம்புட்டு போராட்டமா?