தான் செஞ்ச வினை தனக்கே திரும்பும்னு நினைச்சிருக்கவே மாட்டாரு! ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு வந்த நெருக்கடி
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இன்று உலகமே தெரிந்துகொள்ள கூடிய நடிகராக உயர்ந்து நிற்கிறார். இவரின் இமாலய வெற்றி அனைவரையும் பிரமிக்க வைக்கின்றது. படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் தனுஷ் இப்போது கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்தப் படத்தில் தனுஷின் காட்சிகள் எல்லாம் முடிக்கப்பட்டு தனுஷையும் அனுப்பி விட்டனர். ஆனாலும் இன்னும் கொஞ்சம் காட்சிகள் எடுக்கப்பட வேண்டும் என கூறி மற்ற நடிகர்களை வைத்து எடுத்து வருகிறாராம் அருண் மாதேஸ்வரன்.
இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’யை ஒரு வழி பண்ணாம விடமாட்டேன்! லண்டனில் இருந்து வேகமெடுக்கும் சுபாஸ்கரன்
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தான் தயாரிக்கிறதாம். ஆரம்பத்தில் 70 கோடி பட்ஜெட்டில் தயாராக இருந்த படம் இப்போது 110கோடியில் வந்து நிற்கின்றதாம். இதில் இன்னும் படப்பிடிப்பு இருக்கிறது என சொல்லி எடுத்துக்கொண்டே இருக்கிறாராம் அருண் மாதேஸ்வரன்.
இந்த நிலையில் சத்ய ஜோதி இதற்கு மேல் எங்களால் இந்தப் படத்திற்கான தொகையை தர முடியாது என விலகி விட அருண் மாதேஸ்வரனே தனது சொந்த செலவில் இருக்கிற காட்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறாராம்.
இதையும் படிங்க :வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா
இதே நிலைதான் நானும் ரௌடிதான் படத்தின் சமயத்திலும் நடந்ததாம். ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி எடுத்த விக்னேஷ் சிவன் போக போக படத்தின் பட்ஜெட்டை அதிகரித்திருக்கிறார். அந்தப் படத்தின் தயாரிப்பாளாரான தனுஷ் இதற்கு மேல் என்னால் செலவிட முடியாது என சொல்லி விலகியிருக்கிறார். தற்போது அது தனுஷ் படத்திற்கே திரும்பியிருக்கிறது.