Captain Miller: தனுஷ் நடிப்பில் வரும் 12 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது’கேப்டன் மில்லர்’ திரைப்படம். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ்ராஜ்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் கேப்டன் மில்லர்.
ஜீவி பிரகாஷ் இசையில் படம் மாஸாக வரவிருக்கிறது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ்தான் தயாரிக்கிறது. படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா நேற்றுதான் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடந்தது.
இதையும் படிங்க: குத்தாட்டமும் இல்ல.. கொண்டாட்டமும் இல்ல! கேப்டன் மறைவிற்கு அஜித் வராததற்கு முக்கிய காரணம்
விழாவிற்கு படக்குழு மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு பேசினார்கள். வழக்கம் போல் தனுஷ் நம் பாரம்பரிய ஆடையான வேஷ்டி சட்டையில் வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் பேசுவதற்கு முன் விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் பேசினார்.
இசை வெளியீட்டு விழா நடந்த அதே நாளில்தான் கேப்டன் மில்லர் திரைப்படம் சென்சாருக்கும் சென்றதாம். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்திருக்கிறார்கள் தணிக்கை குழு அதிகாரிகள்.
இதையும் படிங்க: அத பாத்து நானே பயந்து போயிட்டேன்!.. விஜயகாந்தின் 30 வருட டிரைவர் சொன்ன பகீர் தகவல்..
ஆனால் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஏராளமான படங்கள் வெளியாகியிருக்கிறது. இதுவரை அந்த நிறுவனம் தயாரித்த எந்தப் படத்திற்கும் ஏ சான்றிதழ் கிடைத்ததே இல்லையாம். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக கிடைத்தால் எங்கள் நிறுவனத்திற்கு ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்று அந்த நிறுவனத்தின் அதிகாரி சொன்னாராம்.
அதனால் யுஏ சான்றிதழ் கொடுக்கும் படியும் தணிக்கை குழுவினரை வற்புறுத்தினாராம். ஆனால் குழு அதிகாரிகள் படத்தில் கடைசி 4 நிமிட காட்சிகள் முழுவதும் வன்முறையாக இருக்கிறது . வேண்டுமென்றால் அந்த காட்சியை வெட்டி எடுக்க சொல்லுங்கள். யுஏ சான்றிதழ் கொடுக்கிறோம் என்று கூறினார்களாம்.
இதையும் படிங்க: முடிஞ்சா என்னைத்தாண்டி போங்க! சவுக்குக்கட்டைய கையில் எடுத்த விஜயகாந்த் – அமைதியான மாணவர்கள்
வேறு வழியின்றி படக்குழுவிடம் சத்ய ஜோதி பிலிமிஸ் பேச அதற்கு அருண் மாதேஸ்வரனும் சம்மதித்துவிட உடனே அந்த காட்சிகளை வெட்டி விட்டார்களாம். எதிர்பார்த்த யுஏ சான்றிதழும் கிடைத்துவிட்டதாம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…