Cinema News
முடிஞ்சா புடிச்சு பாரு!.. சிவகார்த்திகேயனுக்கு சவால் விடும் தனுஷ்.. கேப்டன் மில்லர் vs அயலான் வசூல்!
கடந்த வெள்ளிக்கிழமை தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட படங்கள் பொங்கலுக்கு வெளியானது. இரண்டில் எந்த படம் பொங்கல் வின்னராக மாறும் என்கிற போட்டி இருந்து வந்த நிலையில், தமிழ்நாட்டை தாண்டி மற்ற மாநிலங்களிலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.
முதல் நாளில் இருந்து தொடர்ந்து முதல் இடத்திலேயே இருந்து தனக்கு அடுத்து தான் சிவகார்த்திகேயன் என்பதை நிரூபித்து வருகிறார் தனுஷ்.
இதையும் படிங்க: பார்க்கவே நல்லா இருகேப்பா!.. லுங்கியில் மாஸ் காட்டும் பிரபாஸ்.. அடுத்த பட டைட்டில் இதுதான்!
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் 8 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், 2ம் நாளில் 5 கோடி ரூபாயாக வசூல் குறைந்தது. ஆனால், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை அதன் வசூல் அதிகரித்து 9 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 30 முதல் 32 கோடி ரூபாய் வசூலை கேப்டன் மில்லர் முதல் 3 நாட்களில் வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
அதே நேரத்தில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்து ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த அயலான் திரைப்படமும் தொடர்ந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது. முதல் நாளில் 4 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அயலான், இரண்டாம் நாளில் 6 கோடி ரூபாயும் மூன்றாம் நாளில் 7 கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் வசூல் ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக அயலான் திரைப்படம் 25 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருப்பதாகவும் ஆனால், இன்னமும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை அயலான் முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரஜினிகாந்துடன் நேரடியாக மோதிய 25 பாக்யராஜ் படங்கள்… ஜெயித்தது யாரு தெரியுமா?