கேப்டன் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த படங்கள்!.. அட இவ்வளவு இருக்கா?..

Published on: February 8, 2024
vijayakanth
---Advertisement---

கேப்டன் விஜயகாந்த் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிகரமானவை தான். தன் நண்பர்களுக்காக அவர் சம்பளமே வாங்காமல் நடித்த படங்கள் பல உள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

சகாப்தம்

சகாப்தம் படம் 2015 ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ் ஆனது. சுதீஷ் தயாரிக்க சுரேந்திரன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசை அமைப்பாளர். இந்தப் படத்தில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடித்துள்ளார். நட்புக்காக கடைசி சண்டைக்காட்சியில் விஜயகாந்த் வருவார். இந்தப் படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். இது அவரது சொந்த தயாரிப்பு. இந்தப் படம் தான் அவரது கடைசி படம்.

தாய்மொழி

1992 தீபாவளி அன்று வெளியானது தாய்மொழி படம். இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் சரத்குமார். இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்துள்ளார். இதில் சரத்குமாருடன் அனல் பறக்கும் சண்டைக்காட்சி உண்டு. ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவானது. இந்தப்படத்திலும் சரத்குமாருக்காக நட்புக்காக விஜயகாந்த் நடித்தாராம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தி

2001 ஆகஸ்டு 10ல் வெளியான படம். ராமநாராயணன் இயக்கியுள்ளார். ராம்கி, விவேக், ரோஜா நடித்துள்ளனர். விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்திலும் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.

இரவு சூரியன்

1991 ஜூலையில் வெளியானது. செந்தில் நாதன் இயக்கத்தில் முரளியுடன் கெஸ்ட் ரோலில் நடித்தார் விஜயகாந்த். இந்தப் படத்தின் இயக்குனர் செந்தில் நாதன் பூந்தோட்டக் காவல்காரன் படத்தை இயக்கியவர். இவருக்காகவே விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்தாராம்.

மனதில் உறுதி வேண்டும்

Manathil Uruthi Vendum
Manathil Uruthi Vendum

1987 தீபாவளிக்கு வெளியானது. கே.பாலசந்தர் இயக்கியுள்ளார். ஸ்ரீதர், சுஹாசினி, விவேக் உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் வங்காளக் கடலே என்ற ஒரு பாடலுக்காக விஜயகாந்த் சம்பளமே இல்லாமல் நடித்தார். சிங்கம்புலி இயக்கத்தில் 2005ல் வெளியானது. சூர்யா நடித்த படம். இந்தப் படத்தில் நட்புக்காக சூட்டிங் சம்பந்தப்பட்ட காட்சியில் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இதற்கு காரணம் கலைப்புலி எஸ்.தாணு. இவர் தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் குரல்

1985ல் வெளியானது. ராமநாராயணன் இயக்கியுள்ளார். எஸ்.எஸ்.சந்திரன் தயாரித்துள்ளார். டி.ராஜேந்தர் இசை அமைத்துள்ளார். அர்ஜூன் நடித்த இந்தப் படத்தில் ஒரு சண்டைக்காட்சிக்காக இந்தப் படத்தில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சந்திரனுக்காக விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்தார்.

வீரன் வேலுத்தம்பி

1987ல் ராமநாராயணன் இயக்கத்தில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை எழுதியுள்ளார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். ராதாரவி, அம்பிகா, வாகை சந்திரசேகர், தியாகு உள்பட பலர் நடித்துள்ளனர். விஜயகாந்த் தனது நெருங்கிய நண்பர்களுக்காக சம்பளமே வாங்காமல் நடித்தாராம். இந்தப்படத்தில் கார்த்திக்கும் கெஸ்ட் ரோலில் நடித்தாராம்.

தேவன்

2002ல் வெளியானது. அருண்பாண்டியன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அவரது நட்புக்காக விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார். கார்த்திக்கும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்தப்படம் கமர்ஷியலா ஹிட் ஆனது.

பெரியண்ணா

1999ல் வெளியானது. எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியுள்ளார். சூர்யாவுடன் இணைந்து விஜயகாந்த் நடித்துள்ளார். லிங்கம் என்ற கதாபாத்திரம் ஏற்று சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் சூர்யாவின் வளர்ச்சிக்காகவும், எஸ்.ஏ.சந்திரசேகருக்காகவும் விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்த படம்.

செந்தூரப்பாண்டி

Senthoorapandi
Senthoorapandi

1993ல் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியானது. இந்தப் படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகருக்காகவும், விஜயின் வளர்ச்சிக்காகவும் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தாராம்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.