
Cinema History
எதிரிகளை காலால் எட்டி உதைத்து துவம்சம் செய்த ஆக்ஷன் ஹீரோவுக்கு இப்படி ஒரு நிலைமையா? அட கடவுளே…!
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் ஆக்ஷனில் கலக்கிக்கொண்டு இருந்தார். அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் பைட் சூப்பராக இருக்கும். அதைப் பார்ப்பதற்காகவே ஒரு பெரும் திரள் வரும்.
ரிஸ்க் எடுத்து டூப் போடாமல் சண்டைக்காட்சியில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டத்தைப் பெற்றார் விஜயகாந்த். இவரது கேப்டன் பிரபாகரன், சின்னக்கவுண்டர், சத்ரியன், மாநகர காவல், ரமணா, சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு ஆகிய படங்கள் சண்டைக்காட்சிக்குப் பெயர் பெற்றவை. அதிலும் இவர் காலால் உதைத்து சண்டை போடுவதில் வல்லவர்.

police vijayakanth
உதாரணத்திற்கு கேப்டன் பிரபாகரன் படத்தில் முதலில் காவல் நிலையத்திற்குள் புகுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சி காணக் காணக் கொள்ளை இன்பத்தைத் தரும். அதி அற்புதமான கால் ஸ்டெப்களால் சண்டை அடித்து பிரமாதமாக நடித்து இருப்பார். இவரது சண்டைக்காட்சிகளில் விஜயகாந்த் டூப் போடாமல் நடித்து பல வீரத்தழும்புகளைப் பெற்றுள்ளார்.
போலீஸ் வேடங்களில் இவர் நடித்தால் அந்தப்படம் சக்கைப் போடு போடும். அரசியலிலும் மாபெரும் சக்தியாக உருவெடுத்து 3வது கட்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இருபெரும் திராவிடகட்சிகளான திமுக, அதிமுகவுக்கு டப் கொடுத்தார்.
அரசியலில் புகுந்த இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே எதிர்த்து நின்று பேசி வலிமைமிக்க எதிர்க்கட்சியின் தலைவராக இருந்தார். இவருக்கென்று பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் பட்டாளமும், நற்பணி மன்றங்களும் உள்ளன.

premalatha and vijayakanth
சமீப காலமாக வயது மூப்பின் காரணமாக இவரால் முன்பு போல பல வேலைகளைச் செய்ய முடியவில்லை. பழைய கம்பீரமான குரலும் போய்விட்டது. இவரது துணைவியார் பிரேமலதா தான் அரசியல் சார்ந்த அனைத்துப் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்.
பல மாதங்களாக ஓய்வு நிலையில் இருந்த விஜயகாந்த்துக்கு நீரிழிவு நோய் காரணமாக வலது காலின் 3 விரல்கள் உணர்வற்ற நிலையில் இருந்தன. மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க அவ்விரல்கள் அகற்றப்பட்டன. எப்பேர்ப்பட்ட ஆக்ஷன் ஹீரோவுக்கு இந்த நிலைமையா என ரசிகர்கள் வேதனைப்படுகின்றனர்.

mazhai pidikatha manithan
விரைவில் இவருக்கு மழை பிடிக்காத மனிதன் என்ற படம் வர உள்ளதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் இவருடன் விஜய் ஆண்டனி நடிக்கிறார். 4 வருடங்களுக்குப் பிறகு வர உள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.