அஜித் கொடுத்த பணத்தை தூக்கி எறிந்த விஜயகாந்த்.. இப்படியெல்லாம் நடந்திருக்கா?!...
திரையுலகில் எந்த பின்புலமும் இல்லாமல் மேலே வந்தவர் நடிகர் அஜித். பல வருடங்கள் பல அவமானங்களை தாண்டித்தான் அஜித் இப்போது இந்த நிலைக்கு வந்துள்ளார். அமராவதி படம் மூலம் அறிமுகமாகி சின்ன சின்ன படங்களில் நடித்து. காதல் மன்னன், அமர்க்களம் என பயணித்து பில்லா திரைப்படத்தில் ஸ்டைலீஸ் ஆக்ஷன் ஹீரோவாக மாறி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.
துவக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படங்கள் தொடர்பான புரமோஷன்களில் கலந்து கொண்ட அஜித், ஒருகட்டத்தில் அதை நிறுத்திக்கொண்டார். மேலும், பத்திரிக்கையாளர்களிடம் நல்ல நட்புடன் இருந்த அஜித் தற்போது யாருடனும் பேசுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக மலேசியாவில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தினார். அதில், அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ரஜினி, கமலும் உள்பட எல்லோரும் கலந்து கொண்டனர். ஆனால், அஜித் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை. இது விஜயகாந்திற்கு கோபத்தை ஏற்படுத்தியது. நிகழ்ச்சி முடிந்து சில நாட்கள் கழித்து விஜயகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ரு.10 லட்சத்திற்கான செக்கையும் விஜயகாந்திடம் கொடுத்துள்ளார்.
கோபமாக இருந்த விஜயகாந்த் அந்த செக்கை தூக்கி எறிந்துவிட்டு ‘எல்லா நடிகர்களும் வந்தார்கள். நீ ஏன் வரவில்லை?.. உன் பணம் எனக்கு தேவையில்லை’ என கத்தியுள்ளார். ஆனால், அமைதியாக இருந்த அஜித் தனது சட்டையை கழட்டி ‘நீங்கள் நினைப்பது போல் இல்லை சார். என் உடம்பை பாருங்கள்’ என காட்டியுள்ளார். அஜித் பைக் ரேஸில் கலந்துகொண்டு கீழே விழுந்து முதுகு வலி ஏற்பட்டு பல அறுவை சிகிச்சைகளை செய்தவர். எனவே, அவரின் உடலை பார்த்த விஜயகாந்தே கண் கலங்கி விட்டாராம்.
இது முன்பே சொல்லி இருக்கலாமே என கேட்டதற்கு, இது மீடியாவுக்கு தெரிய வேண்டாம் என நினைத்தேன். என்னால் நடிக்க கூட முடியவில்லை. ஆனாலும் என்னை நம்பி தயாரிப்பாளர்கள் இருப்பதால் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். அதனால்தான் அந்த நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை’ என அஜித் கூறியுள்ளார். அதன்பின் அவர் மீது பரிதாப்பட்டு அவரை அனுப்பி வைத்தாராம் கேப்டன் விஜயகாந்த். இந்த தகவலை பலவருடங்களாக சினிமாவில் பத்திரிக்கையாளராக இருக்கும் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் உடலில் இதுவரை 34 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்படும். ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல்தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கை மேல காசு!.. ஆனாலும் 100 ரூபாய்க்காக அல்லோலப்பட்ட சந்திரபாபு.. என்ன மேட்டரா இருக்கும்?..