பிக் பாஸ் சினேகனுக்காக கேப்டன் இறங்கி செய்த செயல்... அவரே கண்கலங்கி கூறிய சூப்பரான செய்தி...

by Manikandan |
பிக் பாஸ் சினேகனுக்காக கேப்டன் இறங்கி செய்த செயல்... அவரே கண்கலங்கி கூறிய சூப்பரான செய்தி...
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதிய கவிஞன் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமாகினார். தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். சமீபத்தில், சினேகன் எழுதிய 'சூரரைப் போற்று' திரைப்படத்தின் ‘காட்டு பயலே’ என்ற பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவர் எழுதிய பாடல்கள் இன்றும் முன்பு காலத்திலும் பிரபலம் என்றே சொல்லலாம். அந்த வகையில், இவர் கேப்டன் விஜயகாந்துக்கு ஒரே படத்தில் அணைத்து பாடல்களையும் இவரே எழுதியுள்ளார். அதில், நடந்த பெரிய கதை குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் பேசுகையில் மிகவும் சுவாரசியமாக இருந்தது.

அதாவது, விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராஜ்ஜியம் திரைப்படத்தில் ஓப்பனிங் பாடலை மட்டும் கவிஞர் வாலியை எழுத வைக்க இயக்குனர் திட்டமிட்டாராம். அப்போது, நடிகர் விஜயகாந்த் ஏன் அவரை தேர்வு செய்தீர்கள் மீதுமுள்ள பாடல்களை சினேகன் தானே எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்களேன - அந்த தமிழ் இயக்குனர் தான் வேணும்… அடம்பிடிக்கும் செல்லக் குட்டி ஜான்வி கபூர்.!

snehan_1548675054120

அந்த ஒரு பாடலை அவரிடமே கொடுக்கலாமே ஏற்கனவே அவர் வளர்ந்து வரும் பாடல் ஆசிரியராக இருக்கிறார் என்று கூறி உடனடியாக கவிஞனை விமானத்தின் மூலம் ஹைதராபாத்திற்கு வர வைத்தாராம். மேலும், அவர் அவர் நல்லவர், யாருக்கும் எந்த தீங்கு நினைக்காதவர் என்று விஜயகாந்த் புகழ்ந்து பேசியதோடு அந்த முதல் பாடலையும் அவரை மனதில் வைத்து எழுதியதாக தெரிவித்தார்.

பழம்பரும் இயக்குனர் மனோஜ் குமார் இயக்கி தயாரித்த "ராஜ்ஜியம்" படம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடித் திரைப்படமாகும், இப்படத்தில் விஜயகாந்த், திலீப், ஷமிதா ஷெட்டி, பிரியங்கா திரிவேதி ஆகியோர் நடித்துள்ளனர்.

Next Story