More
Categories: Cinema History Cinema News latest news

பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. தனது கிராமத்திய இசையால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர். மெல்லிசை கொடுத்த எம்.எஸ்.விஸ்வநாதனை மட்டுமே நம்பியிருந்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ராஜாவின் ரம்மியமான, மண்வாசனை மிக்க பாடல்கள் புது அனுபவத்தை கொடுத்தது.

80களில் கொடிகட்டி பறந்தார் இளையராஜா. இவரின் இசையை நம்பியே பல திரைப்படங்கள் உருவானது. முதலில் ராஜாவின் இசையை உறுதி செய்துவிட்டுத்தான் படங்களையே தயாரிப்பாளர்கள் துவங்குவார்கள். ஏனெனில் ராஜா இசையமைத்தால் படம் வியாபாராம் ஆகிவிடும் என்பதே அப்போது வியாபார கணக்காக இருந்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: வேணும்னு கூட்டிட்டு வந்து இப்படியா அடிக்கிறது! விஜயகாந்த் விட்ட அறையால் சுருண்டு விழுந்த ராதிகா

இளையராஜாவும் தனது பாடல்களாலும், பின்னணி இசையாலும் மொக்கை படங்களை கூட ஓட வைத்தார். அதனால்தான் பிரசாத் ஸ்டுடியோவில் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவரின் தரிசனத்திற்காக கால் கடுக்க காத்திருந்தனர். அவர் யாரை அழைக்கிறாரோ அவருக்கு இசையமைக்க போகிறார் என அர்த்தம்.

இசையில் அசாத்திய திறமை கொண்டவர் இளையராஜா. அதனால்தான் அவரை இசைஞானி என எல்லோரும் அழைத்தனர். இப்போதும் கூட காரில் செல்லும்போது பலரும் அவரின் பாடல்களைத்தான் கேட்கின்றனர். 80,90களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, கார்த்திக், மோகன், ராமராஜன் என அப்போது பீக்கில் இருந்த பல நடிகர்களும் இளையராஜாவின் இசையைத்தான் நம்பியிருந்தனர்.

இதையும் படிங்க: எல்லோர் முன்னிலையிலும் கன்னத்தில் பளார்விட்ட விஜயகாந்த்.. வன்மம் வளர்த்து பழிவாங்கிய வடிவேலு!..

ஒருநாளில் ஒரு பாடலுக்கான அனைத்து மெட்டுக்களையும் போட்டு பாடல்களை பதிவு செய்தும் கொடுத்துவிடுவார் இளையராஜா. அவரைப்போல் வேகமாக வேலை செய்த இசையமைப்பாளர் அப்போது யாருமில்லை. விஜயகாந்தின் பல படங்களுக்கு இசையமைத்து அற்புதமான மெலடிகளை கொடுத்தவர் இசைஞானி.

விஜயகாந்த் தயாரித்து, நடித்து 1988ம் வருடம் வெளியான திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன். இப்படத்திற்கு அற்புதமான பாடல்களை ராஜா போட்டு கொடுத்தார். பாடலை கேட்டு அசந்துபோன விஜயகாந்த் அப்போது இளையராஜாவுக்கு என்ன சம்பளமோ அதை இரண்டு மடங்காக கொடுத்து இசைஞானியை கொண்டாடினார்.

இதையும் படிங்க: விஜயகாந்தை காலி பண்ணதே அந்த விஷயங்கள்தான்!.. பகீர் தகவலை சொன்ன பிரபல நடிகர்…

Published by
சிவா