விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை... தொடர் சிகிச்சையில் கேப்டன்.. மருத்துவமனை வெளியிட்ட ஷாக் அறிக்கை..!

Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் சில வருடங்களாகவே உடல் இழைத்து சிகிச்சையில் இருக்கிறார். இந்த நிலையில் அவரின் ஆரோக்கியத்தில் மேலும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பின்னர் ஹீரோக்களுக்கு இருந்த அடையாளத்தினை உடைத்தவர் விஜயகாந்த். பெருவாரியாக அவர் நடித்த எல்லா படங்களுமே ஆக்‌ஷன் ரகம் தான். அவர் உடம்புக்கு எல்லா சண்டைக் காட்சிகளையும் டூப் போடாமல் செய்ய துணிந்தவர். சக நடிகர்களுக்கு எப்போதுமே மரியாதை கொடுப்பார்.

இதையும் படிங்க: பிரதீப்கிட்ட இத பத்தி பேசுனேன்! ஆனா அவன் என்ன சொன்னான் தெரியுமா? மூஞ்சி பஞ்சர் ஆகியும் அடங்காத வனிதா

நடிகர் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த போது எந்த பிரச்னையும் இல்லாமல் கொண்டு சென்றவர். இப்படி நிறைய செய்த விஜயகாந்துக்கு ரசிகர்கள் வைத்த செல்ல பெயர் தான் கேப்டன். சினிமாவில் இருந்து எம்.ஜி.ஆருக்கு பின்னர் அரசியலுக்கு வந்து நல்ல புகழை தேடியவர்.

ஆனால் விதியால் அவரின் உடல்நிலையில் கோளாறு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். சிகிச்சையில் அவரின் பேச்சு போனது. உடல் எடையும் கணிசமாக குறைந்தது. அவரின் கம்பீரமான உருவத்தினை பார்த்தே பழகப்பட்ட ரசிகர்கள் மெலிந்து இருக்கும் விஜயகாந்தினை பார்த்து அதிர்ச்சி ஆகினர். பொது விழாக்களில் மட்டும் அவரின் குடும்பத்தினரால் ஒரு புகைப்படம் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: ரைட்டு அடுத்த பிரச்னை தொடங்கியாச்சு… லியோ பட தயாரிப்பாளர் மீது கடுப்பில் இருக்கும் லோகேஷ்… சேதி என்ன தெரியுமா?

தீபாவளிக்கு பின்னர் உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டதை அடுத்து சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 18ந் தேதி அட்மிட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மூச்சு திணறலும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேப்டன் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அதில், திரு விஜயகாந்த் உடல்நிலை சரியாக இருந்தது. ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அவர் சீராக இல்லை. நுரையீரலுக்கான சிகிச்சை தேவைப்படுகிறது. இதனால் அவர் மேலும் 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறவேண்டும். விரைவில் அவர் பூரண குணமடைவார் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

Next Story