Categories: Cinema History Cinema News latest news

நம்ம கேப்டன் இவளோ வெள்ளந்தியான மனுஷனா.?! பத்திரிக்கையாளருக்கு நடந்த ருசிகர சம்பவம்.!

தமிழ் சினிமாவிலும், பொது வாழ்விலும் சரி இவர் செயல்பட்டாலும், செயல்படாமல் ஒதுங்கி இருந்தாலும் இவரை பற்றி பேசாதோர் இருக்க மாட்டார்கள் என்றே கூற வேண்டும். அந்தளவுக்கு இவர் செய்த வியக்கத்தக்க சம்பவங்கள் இவர் பேர் சொல்லும் அவர் தான் கேப்டன் விஜயகாந்த்.

அதே போல, மனுஷன் அவளோ வெள்ளந்தியான நபர். கோபமோ, பாசமோ, எதுவாயினும் வெளிப்படையாக பேசிவிடுவார். இப்படி பேசினால் நம்மை ஏதும் சொல்வார்களோ என நினைக்கும் நபர் இல்லை.

அவர் ஓர் முக்கிய பொறுப்பில் இருக்கும் காலகட்டத்தில் அவருக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம், சென்னையில் முக்கிய இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர் ஜெய் கோபால் கரோடியா என வேற்று மொழி பெயராக இருக்கிறது. அதனை தமிழில் மாற்ற நடவடிக்கை ஏதேனும் எடுங்க கேப்டன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – இன்னும் திருந்தாத அஜித்.. இந்த படமும் அதே மாதிரியா.?! சலித்துக்கொள்ளும் ரசிகர்கள்.!

இவரும் அந்த வழியாக சென்று பார்கையில், அது தமிழில் எழுதப்பட்டு இருந்துள்ளது. அதனை பார்த்து கேப்டன், பத்திரிகையாளரிடம், அது தமிழில் தானே எழுதியுள்ளார்கள் என கூறி நகர்ந்துவிட்டாராம். பத்திரிகையாளருக்கு ஒன்றும் புரியவில்லையாம். அந்த பள்ளி பெயரே வேற்று மொழி, நாம் அதனை தமிழில் மாற்ற சொன்னால், இந்த மனுஷன் இவளோ வெள்ளந்தியாய் நம்மிடம் சொல்கிறாரே என குழம்பி போய் நின்றாராம்.

Published by
Manikandan