தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி மற்றும் கமல் ஆகியோருக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். தற்போதும், இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், அதுபோக இவரது திரைப்படங்கள் கூட இன்னும் தொலைக்காட்சிகளில் நல்ல டிஆர்பி ரேட்டிங் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இவரது திரைப்படங்களில் கம்பீரமான வசனமும், ஆக்ரோஷமான சண்டை காட்சிகளும் தவறாமல் இடம்பெறும். அதேபோல், தனக்கு சக நடிகர்கள் டூப் போடுவதை இவர் பெரும்பாலும் விரும்புவதில்லை. மேலும், படப்பிடிப்பில் யாருக்கேனும் அடிபட்டுவிட்டால் தனக்கு அடிபட்டது போல துடித்து விடுவாராம்.
அப்படி ஒரு சம்பவத்தை தான் ‘செந்தூரப்பூவே’ பட சூட்டிங் போது, அப்படத்தில் வில்லனாக நடித்திருந்த வில்லனாக நடித்த அழகு என்பவர் அண்மையில் ஒரு நேர்காணலில் தெரிவித்து இருந்தார். அதாவது, அந்த சூட்டிங் நடக்கும் பொழுது ரயிலின் மேற்புறத்தில் விஜயகாந்தை ஒரு பக்கம் கயிறால் கட்டி இன்னொரு பக்கம் நான் கட்டப்பட்டிருப்பேன் அப்போது, நானும் அவருடன் மேற்புறத்தில் தான் இருந்தேன். அவர், கயிற்றை பிடித்து இழுக்கும்பொழுது, தவறுதலாக பல்ட்டி அடித்து ரயிலின் அந்தப் பக்கம் முள் புதருக்குள் விழுந்துவிட்டேன்.
இதையும் படிங்களேன் – 5 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய சூர்யா… கொண்டாட்டத்தில் யோகி பாபு…
இதனை, பார்த்த விஜயகாந்த் துடித்துவிட்டாராம் ‘அழகு சார்’ என்று கத்திக்கொண்டு ரயிலின் மேற்புறத்தில் கையை தூக்கிக் கொண்டு நின்று விட்டார். பிறகு, அழகு அந்த முள் புதரில் இருந்து கை, கால்களில் பயங்கர காயங்களுடன் ரயில் தண்டவாளத்தில் வந்து நின்றவுடன் தனது கையை கீழே இறக்கி நிம்மதி பெருமூச்சு விட்டாராம் கேப்டன் விஜயகாந்த்.
மேலும் அவர் பேசுகையில், இதனை தொடர்ந்து ரிஸ்க்கான சண்டைக் காட்சிகள் என்றால் பெரும்பாலும் அதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தான் மற்றவர்களை அனுமதிப்பார் விஜயகாந்த் என்று மூத்த நடிகர் அழகு, விஜயகாந்த் பற்றி மிகவும் பெருமையாக பேசினார்.
Surya: நடிகர்…
சொர்க்கவாசல் படத்தின்…
Lokesh kanagaraj:…
தனுஷ் தயாரிச்ச…
மருத்துவராக இருந்தாலும்…