கருப்பா இருந்தா ரஜினிக்கு தம்பியா?.. அவமானத்தை தாண்டி வளர்ந்த கேப்டன் விஜயகாந்த்...

Rajni, Vijayakanth 2
கேப்டன் விஜயகாந்தைப் பொறுத்தவரை ரஜினி மாதிரி கருப்பாக இருந்தாலும் பல்வேறு அவமானங்களையும் தாங்கி, பல தடைகளையும் தாண்டித் தான் தனது முயற்சியாலும், திறமையாலும் சினிமாவில் ஹீரோவாக மாறினார். அவர் நடித்த படங்கள் எல்லாமே வெற்றி தான்.
தயாரிப்பாளர்களுக்கும் அவரது படங்கள் கணிசமான லாபத்தைப் பெற்றுத் தரும். அவர் ஆரம்பகாலத்தில் பட்ட அவமானங்கள் என்னென்ன? அதிலிருந்து அவர் மீண்டு வெற்றி பெற்றது எப்படி என்பதை இந்த சிறு சம்பவமே நமக்கு உணர்த்தி விடும். என்னன்னு பார்க்கலாமா...
விஜயகாந்த் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது அவருக்கு என் கேள்விக்கு என்ன பதில் என்ற படத்தில் ரஜினிக்குத் தம்பியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ரஜினியோ இயக்குனர் மாதவனிடம் விஜயகாந்த் தனக்கு தம்பியாக நடிக்க மறுப்பு தெரிவித்தார். கருப்பா இருந்தா நீ ரஜினிக்கு தம்பியாக ஆகிவிட முடியுமா என்று பலரும் அவமானப்படுத்தினாராம்.
இதற்கெல்லாம் பதிலடியாக விஜயகாந்த், நான் பெரிய ஹீரோவாகி வெற்றி பெறுவேன் என்றார். தான் வாங்கிய அட்வான்ஸ் 101ஐ கூட திருப்பிக் கொடுத்தாராம். பின்னர் முதல் படமான இனிக்கும் இளமையில் வில்லனாக தோன்றினார். அடுத்து தூரத்து இடி முழக்கம், சட்டம் என் கையில் என பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார்.

SOI
எவரால் நிராகரிக்கப்பட்டாரோ அவரே விஜயகாந்த்தை வில்லனாக செலக்ட் செய்து நடிக்க வைக்கத் தூது அனுப்பினார். ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜயகாந்தைத் தான் கேட்டார்களாம். அதற்காக ரூ.1 லட்சம் அட்வான்ஸ்சும் கொடுத்தாராம்.
நண்பர் ராவுத்தரோ, உன்னை காலி பண்ண செய்கின்ற சதி தான் இது. ஹீரோவாக நடித்த பின்னர் வில்லனாக நடிக்கக்கூடாது என்று சொன்னார். நண்பரது சொல்லைக் கேட்டு அட்வான்ஸ் தொகையை திரும்பக் கொடுத்தார் விஜயகாந்த். தொடர்ந்து நண்பனுக்காக கடைசி வரை ஹீரோவாகவே நடித்தார்.