அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடும் போட்டி, ரிமோட் ஹெலிகாப்டர், பைக்கில் பல நூறு கிலோ மீட்டர் தனியாக பயணம் செய்வது என அவருக்கு பிடித்த பல விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம். மோட்டார் ரேஸ் துறையில் சாதிக்க பணம் வேண்டும் என்பதற்காகத்தான் அஜித் சினிமாவுக்கே நடிக்கவந்தார் என சொல்வதுண்டு.
90களில் சினிமாவில் நடித்துக்கொண்டே பைக் ரேஸ்களிலும் கலந்துகொண்டு வந்தார் அஜித். அப்போது சிலமுறை விபத்தில் சிக்கி அவரின் உடலில் பல இடங்களில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதனால், உடலில் அவருக்கு பல பிரச்சனைகளையும் ஏற்பட்டது.
ஆனாலும் பைக் மற்றும் கார் ரேஸ் மீதான காதல் அஜித்துக்கு இன்னும் குறையவே இல்லை. திருமணத்திற்கு பின் பல வருடங்கள் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளாமல் இருந்த அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ்களில் கலந்து கொள்ள துவங்கி விட்டார். தற்போது மலேசியாவில் நடக்கும் கார் ரேஸில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

ஒருபக்கம் அவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனே அஜித்தின் அடுத்த படத்தின் இயக்குனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் பல மாதங்களாகியும் இன்னும் அடுத்த அப்டேட் வெளியாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் அஜித் கேட்கும் 185 கோடி சம்பளம்தான். அஜித்துக்கு அவ்வளவு சம்பளம் கொடுக்க தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளரும் தயாராக இல்லை. எனவே மும்பைக்கு சென்று கூட தயாரிப்பாளர்களை தேடி பார்த்தார்கள். ஆனால் பலன் இல்லை. அந்த படம் அப்படியே தேங்கி நிற்கிறது.
நல்லவேளை அஜித் இப்போது கார் ரேஸில் இருக்கிறார்.. எனவே, அவர் ரேஸில் இருப்பதால்தான் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார் என பலரும் நினைக்கிறார்கள். இல்லை என்றால் அஜித்தின் அடுத்த படத்திற்கு தயாரிப்பாளரே கிடைக்கவில்லை என்கிற இமேஜ் வெளியே கசிந்திருக்கும். இது அஜித்துக்கு அவமானமாகவும் இருந்திருக்கும்.. நல்லவேளை கார் ரேஸ் அவரை அவரின் இமேஜை காப்பாற்றி விட்டது என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.