தமிழின் பழம்பெரும் கர்னாடக சங்கீத கலைஞராக திகழ்ந்தவர் மதுரை சோமு. மிகவும் புகழ்பெற்ற கர்னாடக பாடகராக வலம் வந்த மதுரை சோமு, கர்னாடக சங்கீத ரசிகர்களின் விருப்பமான கலைஞராகவும் திகழ்ந்தார்.
மதுரை சோமுவின் தீவிர ரசிகர்களில் இருவர், சோமுவின் கச்சேரிகள் திருச்சி பகுதியில் எப்போதெல்லாம் நடைபெறுமோ அப்போதெல்லாம் போய் விடுவார்களாம். அந்த இருவரில் ஒருவருக்கு பிற்காலத்தில் மதுரை சோமுவின் கச்சேரிகளில் தம்புரா வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ஒரு முறை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் மதுரை சோமுவின் கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் இரவு முழுவதும் கச்சேரி நடக்கும். மதுரை சோமுவின் ரசிகராக இருந்து அவரது கச்சேரிகளில் தம்புரா போடுவதற்கான வாய்ப்பு கிட்டிய இளைஞர், அந்த திருக்காட்டுப்பள்ளி கச்சேரியிலும் தம்புரா வாசித்துக்கொண்டிருந்தார்.
நள்ளிரவு என்பதால் ஒரு கட்டத்தில் அந்த இளைஞருக்கு தூக்கம் சொக்கிப்போனது. தம்புரா வாசித்துக்கொண்டிருந்தபோது தூங்கி வழிந்ததால் தம்புராவை விட்டுவிட்டார். இதனால் சோமுவுக்கு ராகம் தடைபட்டுப்போனது. வந்த கோபத்தில் அந்த இளைஞரை அங்கேயே பளார் என அறைந்துவிட்டாராம் சோமு.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழித்து, அதாவது 1983 ஆம் ஆண்டு, தேவர் பிலிம்ஸ் “சஷ்டி விரதம்” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தது. இப்போது அந்த இளைஞர் ஒரு மிகப் பிரபலமான பாடலாசிரியர் ஆகிவிட்டார். அந்த “சஷ்டி விரதம்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை மதுரை சோமு பாடுவதாக இருந்தது.
அந்த பாடலை பாடுவதற்காக சோமு ஸ்டூடியோவிற்கு வந்திருந்தார். அப்போது அந்த பாடலை எழுதுவதற்காக அந்த பாடலாசிரியரும் அந்த ஸ்டூடியோவிற்கு வர, இரண்டு பேரும் ஒருவரை ஓருவர் பார்த்துக்கொண்டனர். அந்த பாடலாசிரியரை பார்ப்பதற்கே மதுரை சோமுவுக்கு சங்கடமாக இருந்தது.
ஆனால் அந்த பாடலாசிரியரோ, மதுரை சோமுவின் கையை பிடித்துக்கொண்டு “அன்றைக்கு நீங்கள் என்னை அறைந்தீர்களே, அந்த அறைதான் இன்று என்னுடைய வளர்ச்சிக்கு காரணம்” என கூறினாராம்.
இதையும் படிங்க: கண்ணதாசனின் அரிய பழக்கத்தைக் கொண்ட இன்னொரு கவிஞர் யார் தெரியுமா?? கேட்கவே வியப்பா இருக்கு!!
மதுரை சோமுவிடம் அறை வாங்கி, பிற்காலத்தில் மிகப் பிரபலமான பாடலாசிரியராக திகழ்ந்த அந்த இளைஞர் வேறு யாருமில்லை, தமிழ் சினிமாவின் வாலிப கவிஞர் என்று போற்றப்படும் கவிஞர் வாலிதான் அவர்.
தமிழ்சினிமாவில் பிரபல…
நடிகர் தனுஷ்…
Jayam ravi:…
Rashimika mandana:…
'திரைக்கதை மன்னன்'…