Biggboss Tamil 8: இந்த ரெண்டு பேரும் 'தான்'... எக்ஸ் போட்டியாளரின் 'ஆரூடம்' பலிக்குமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:04  )

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாளர்களாக இந்த வாரம் 6 பேரை பிக்பாஸ் வீட்டுக்குள் இறக்கி இருக்கிறார். இதற்கு மேலாவது ஆட்டம் சூடு பிடிக்குமா? என்பதை பார்க்கவே பிக்பாஸ் இந்த அரிய முயற்சியில் இறங்கி உள்ளார்.

நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களுக்கு மேல் ஆகியும் கூட இன்னும் பிக்பாஸ் ஆட்டம் சூடுபிடிக்கவில்லை. அதிலும் விஜய் சேதுபதி வரும் வாரயிறுதி நிகழ்ச்சியும் கூட டல்லடிக்க ஆரம்பித்து விட்டது தான் சோகம். என்னதான் விஜய் சேதுபதி போட்டியாளர்களுக்கு டிப்ஸ்களை வாரி வழங்கினாலும், அவர்கள் அதை காற்றில் பறக்க விட்டுவிடுகின்றனர்.

சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டில் இரண்டு சிறந்த போட்டியாளர்கள் யார்? என்று கேட்க பதிலுக்கு தர்ஷா ஆண்களில் முத்துக்குமரன், பெண்களில் ஜாக்குலின் இருவரையும் குறிப்பிட்டு இருக்கிறார். பொதுவாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் இமேஜினை டேமேஜ் செய்ய தான் பார்ப்பர்.

ஆனால் அதுபோல இல்லாமல் நேர்மையாக தர்ஷா பதில் அளித்திருக்கிறார் என்பது நிச்சயம் பாராட்டத்தக்க ஒரு விஷயம் தான். தர்ஷாவின் கணிப்பு பலித்து மேற்கண்ட இரண்டு போட்டியாளர்களும் பைனலுக்கு முன்னேறுவார்களா? என்பதை பார்க்கலாம்.

Next Story