நீ வேஷ்ட்யா... உள்ள என்ன பண்ணி கிழிச்ச? வனிதாவிடம் சிக்கி சின்னா பின்னமான அர்னவ்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:33  )

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது 3-வது வாரம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த சீசனை கமலஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார். யாரையும் பாரபட்சம் பார்க்காமல் திட்டி தீர்த்து விடுகின்றார் நடிகர் விஜய் சேதுபதி. பிக் பாஸ் வீட்டில் 2-வது வாரத்தில் இரண்டாவது எலிமினேஷனாக வெளியேற்றப்பட்டவர் தான் நடிகர் அர்னவ்.

அவர் வீட்டில் யாரிடமும் சரியாக பேசவில்லை திமிராக நடந்து கொள்கின்றார் என்று எலிமினேஷன் செய்யப்பட்டார். அதுமட்டுமில்லாமல் அவார்டு கொடுக்கும் போது பல பிரச்சனைகள் வந்தது. மேலும் நடிகர் அர்னவ் அன்ஷிதாவிற்கு சொம்பு தூக்கி என்று அவார்ட் கொடுத்திருந்தார். இதனால் அவர் மிகவும் எமோஷனலாகி அழுதிருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.

இதையடுத்து 2-வது வாரத்தில் அர்னவ் எலிமினேஷன் ஆவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏன் அவரே கூட எதிர்பார்க்கவில்லை. கடைசி நிமிடம் வரை நாம் சேவ் ஆகி விடுவோம் என்று மிகவும் தைரியமாக இருந்தார். பின்னர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் கூட விஜய் சேதுபதியிடம் திட்ட வாங்கிக் கொண்டுதான் சென்றார்.

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நபர்களை வைத்து பிக் பாஸ் சீசன் 8 ஃபன் அன்லிமிடெட் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் எலிமினேட்டான ரவீந்திரர் கலந்து கொண்டிருந்தார். இவரிடம் அதற்கு முந்தைய சீசனில் விளையாடிய சுரேஷ் தாத்தா பல கேள்விகளை கேட்டிருந்தார்.

ஆனால் இந்த முறை அப்படி இல்லை அர்னவ் யாரிடம் சிக்கி இருக்கின்றார் என்று கேட்டால் நடிகை வனிதாவிடம் தான். இது தொடர்பான புரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. ப்ரோமோவே பார்ப்பதற்கு தீயாய் இருக்கின்றது. எடுத்த எடுப்பிலேயே நீ வேஷ்ட்யா நாங்க எதிர்பார்த்த எதையும் நீ செய்யவே இல்லை. அதற்கு நான் இப்படித்தான் என்னுடைய கேரக்டர் இப்படித்தான் என்று அர்னவ் பேசினார்.

அதற்கு வனிதா இப்ப வந்து வாய் கிழிய பேசுறியே உள்ள என்ன பன்னி கிழிச்ச என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை கேட்கின்றார். அதற்கு அர்னவ் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகின்றார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Next Story