MayaKrishnan: பிக்பாஸ் தமிழ் கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றத்தை குறித்து நடிகை மாயா கிருஷ்ணன் தெரிவித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பரபரப்பாக நடந்து வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுதி வழங்கி வருகிறார். வார இறுதி நாட்கள் பெரும் வரவேற்பை கூட முதல் ஐந்து நாட்களில் போட்டியாளர்களால் ரசிகர்களுக்கு கொடுக்க முடியவில்லை என்ற கேள்வி நிலவி வருகிறது.
இந்நிலையில் கடந்த சீசன் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. அதிலும் முதல் முறையாக ரசிகர்களின் அனுமதியில்லாமல் ஒரு போட்டியாளரை சக போட்டியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பு குழு வெளியேற்றியது. இது ரசிகர்களுக்கு இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த பிரச்சனையின் போது சிக்கிய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கோரிக்கை வைத்த போட்டியாளர்களான மாயாகிருஷ்ணன், பூர்ணிமா ரவி, நிக்ஷன், ஐஷு உள்ளிட்டோர் ரசிகர்களால் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களால் நிகழ்ச்சியில் வெல்லவும் முடியாமல் போனது.
இந்நிலையில் இந்த சீசன் குறித்து நடிகை மாயாகிருஷ்ணன் பேசியிருக்கும் ஒரு வீடியோவில், பிக் பாஸ் சீசன் 7ல் நிறைய பிரச்சனைகள் நடந்தது. உங்களுக்கு நிறைய விஷயங்கள் காட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. வேறு எதுவும் என்னால் இப்பொழுது சொல்ல முடியாது என பேசி இருப்பார்.
இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வரும் ரசிகர்கள் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களுடைய காண்ட்ராக்ட் முடிந்துவிட்டது தானே. நீங்களே அதற்குரிய காரணத்தை சொல்ல வேண்டியது தானே என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 தொடங்கிய பின்னர் தான் கடந்த சீசன் போட்டியாளர்கள் விமர்சிப்பதை ரசிகர்கள் விட்டுருக்கும் நிலையில் தேவையே இல்லாமல் ரசிகர்களை மீண்டும் சீண்டுவது போல் மாயாகிருஷ்ணன் பேசியிருப்பது ரசிகர்களிடம் கடுப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…