விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. விஜய் சேதுபதி முதன்முறையாக இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். ஏற்கனவே சன் டிவியில் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளர்களாக சுமார் 18 பேர் நேற்று நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற போட்டியாளர்களுக்கு மாதிரி கோப்பையை விஜய் சேதுபதி கொடுத்து அனுப்பினார்.
ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, தீபக், விஜே விஷால், அர்னவ், அன்ஷிதா, அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், சத்யா, தர்ஷிகா, செளந்தர்யா, ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, சுனிதா கோகோய், முத்துகுமரன் மற்றும் ஜாக்குலின் உள்ளிட்டோர் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இந்த சீசன் நடைபெற உள்ள நிலையில், ஆரம்பமே கோட்டை கிழித்து சண்டையை ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், கடைசியில் பெரிய குண்டாக தூக்கி போட்ட விஜய் சேதுபதி 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற போகிறார் என்று அறிவித்துள்ளார்.
முதல் நாமினேஷனிலேயே எவிக்ஷன் இருக்க வாய்ப்பு இருக்கும் நிலையில், பெண் போட்டியாளர்களில் ஒருவர் தான் வெளியேறுகிறார் என்கிற தகவல் கசிந்துள்ளது. செளந்தர்யா அல்லது தர்ஷிகா வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.
பிக் பாஸ் தமிழ் புதிய சீசனை டிரெண்டாக்க ஆரம்பத்திலேயே பலிகடாவை கொடுக்கப் போகிறார்களா என விஜய் டிவியை ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். வாம்மா மின்னல் என வந்த வேகத்தில் வீட்டை விட்டு ஓடப் போவது யாரு என்பதை பார்க்க இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை காலை முதலே ரசிகர்கள் ஹாட்ஸ்டாரில் பார்த்து வருகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…