Connect with us

ஏம்ப்பா உன்னதான் தப்பு பண்ணியாமே? இது vjs ஸ்டைல்.. கமல் ஸ்டைல் எப்படி தெரியுமா?

latest news

ஏம்ப்பா உன்னதான் தப்பு பண்ணியாமே? இது vjs ஸ்டைல்.. கமல் ஸ்டைல் எப்படி தெரியுமா?

கமலுக்கும் விஜய்சேதுபதிக்கும் இருக்கும் வித்தியாசமே இதுதான்! தடாலடியாய் இறங்கிய மக்கள் செல்வன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சிதான். ஏழு சீசன்களை கடந்து வெற்றிகரமாக எட்டாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கின்றது. பிக்பாஸ் சீசனின் எட்டாவது சீசனில் முதல் ஆளாக எண்டிரி கொடுத்தவர் ரவீந்தர். அவர்தான் முதல் வார எவிக்‌ஷனில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

அதுவும் நிகழ்ச்சி தொடக்க விழாவிலேயே தன் ஸ்டைல் என்ன என்பதை காட்டினார் விஜய்சேதுபதி. அதனால் வார இறுதி நாள்களை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டிருந்தார்கள். ஏனெனில் ஒவ்வொரு வார இறுதியிலும் போட்டியாளர்களை பந்தாட விடுவார் கமல். அதை போல் விஜய்சேதுபதியின் ஸ்டைல் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கவே ஆர்வமாக இருந்தனர்.

அவர்கள் ஆர்வத்திற்கு தீனி போடும் விதமாக ஒவ்வொரு போட்டியாளர்களையும் சும்மா லெஃப்ட் ரைட் வாங்கினார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் கமலிடமிருந்து எந்த விதத்தில் விஜய்சேதுபதி வித்தியாசப்படுகிறார் என பல விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அதாவது கமல் ஒருவரை தன்னுடைய வலைக்குள் கொண்டுவர மெல்ல மெல்ல சிலந்தி வலை பின்னுவது மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக தன் வழிக்குள் கொண்டு வருவார். டார்கெட் சரியாக மாட்டியவுடன் அவ்ளோதான். கமல் வலையில் இருந்து தப்பிக்கவே முடியாது. ஆனால் வலிக்காமல் ஊசி போடுவதில் கமல் ஒரு சிறந்த டாக்டர் என்று சொல்லலாம்.

ஆனால் விஜய்சேதுபதி இதற்கு முற்றிலும் மாறானதாக இருக்கிறார். வார்த்தை ஜாலங்கள் எல்லாம் கிடையாது. சுற்றி வளைத்து பேசவில்லை. ஏம்ப்பா ராமசாமி தப்பு பண்ணியாமே.. ஆமாவா இல்லையா? என்று பட்டென்று கேட்டு விடுவார். எப்படி போனாலும் கேட்டை சாத்தினா எப்படித்தான் போகிறது என போட்டியாளர்களை விழிபிதுங்க வைக்கிறார் விஜய்சேதுபதி.

எல்லாவற்றிற்கும் மேலாக விஜய்சேதுபதி மிகவும் வெளிப்படையாக இருக்கிறார். ஆனால் கமல் கைத்தட்டல்களுக்காகவே சில விஷயங்களை பேசி விடுவார். விஜய்சேதுபதி பேசினாலே கைத்தட்டல்தான்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top