Connect with us

Biggboss Tamil: சர்ச்சை மன்னனுக்கு டாட்டா காட்டிய ரசிகர்கள்… கிளம்புங்கப்பா!..

latest news

Biggboss Tamil: சர்ச்சை மன்னனுக்கு டாட்டா காட்டிய ரசிகர்கள்… கிளம்புங்கப்பா!..

பிக்பாஸ் தமிழ் இந்த வார எலிமினேஷன் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

Biggboss Tamil: பிக் பாஸ் சீசன் 8 வார இறுதி எபிசோட்களின் ஷூட்டிங் இன்று நடந்த ஒரு நிலையில் எலிமினேஷன் குறித்த சுவாரசிய அப்டேட் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு வாரங்கள் கடந்து இருக்கும் நிலையில் இன்னமும் இந்த சீசன் ரசிகர்களிடம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது. அதிலும் கடந்த சீசன்கள் ப்ரோமோ மட்டுமாவது பெரிய அளவில் வரவேற்பை பெறும்.

ஆனால் இந்த சீசன் மிகப்பெரிய அளவில் டல்லடித்து வருவது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ஒரே விதிவிலக்காக வார இறுதி எபிசோட்களில் விஜய் சேதுபதி அடிக்கும் தக்லைஃப்காக மட்டுமே சிலர் தொடர்ந்து பிக் பாஸை இன்னுமும் பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த வாரம் வார இறுதி எபிசோடை முதல்முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார். எந்த இடத்திலும் பூசி முழுகாமல்., தான் குற்றம் சாட்ட வேண்டிய விஷயங்களை சரியான நேரத்தில் அவர்கள் முகத்திற்கு நேராக சொன்னதில் ரசிகர்கள் இடம் அப்ளாஸை குவித்தார் விஜய் சேதுபதி.

முதல் வாரம் மிக சிறப்பாக விளையாடி கன்டெண்ட் கொடுத்த தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும் அவர் உடல்நிலை காரணமாக குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில்தான் அவர் வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் இந்த வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் 10 பேர் இருந்தனர். இதில் சௌந்தர்யா அதிக வாக்குகளை வாங்கி முதலிடத்தில் இருக்கிறார். கடைசி இடத்தில் சச்சனா மற்றும் அர்னவ் இருப்பதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சிக்கு கன்டெண்ட் கொடுத்து வரும் சக்சனாவை காப்பாற்றி அர்னவை வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சர்ச்சைக்கு பெயர் போன இவர் முதல் நாளில் ஆம்பளை ஒரு கை மோதிப் பார்க்க வேண்டும் என பேசி, விஜய் சேதுபதியிடம் குட்டு வாங்கிய சம்பவமும் ரசிகர்களிடம் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top