Biggboss Tamil 8: காதலிக்கு நேர்ந்த கொடுமை... 5 முறை தற்கொலை முயற்சி... உருகவைத்த போட்டியாளர்!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 12:18:07  )
sathya
X

#image_title

Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் தற்போது 'கடந்து வந்த பாதை' டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த வருத்தம், சோகம், அவமானம், காதல், திருமணம், குழந்தை வளர்ப்பு என பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதில் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் சத்யா பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ரசிகர்களை உருக வைத்துள்ளது. சிறிய வயதில் அப்பா-அம்மாவை விட்டு அப்பத்தாவிடம் இருந்த சத்யா ஹாஸ்டலுடன் சேர்ந்த பள்ளிக்கூடத்தில் தங்கி படித்துள்ளார்.

அங்கு அவருக்கு ஒரு காதல் வந்துள்ளது. இரண்டு பேருக்கும் நடுவில் எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த போது காதலி ஒரு ஊருக்கு சென்றுள்ளார். அங்கு அவரை நான்கைந்து இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டனர்.

இதையடுத்து போதைப்பொருளை உபயோகிக்க ஆரம்பித்து பின்னர் சோகம் தாளாமல் 5 முறை சத்யா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். சினிமாவுக்கு வந்த பின்னர் ரம்யாவை பார்த்து காதல் வசப்பட்டு திருமணம் செய்ய தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை உள்ளது.

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய சத்யா காதலி மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களுக்கு தண்டனை கிடைத்து விட்டது. தற்போது வாழ்வின் அர்த்தம் புரிந்துள்ளது என்று உருக்கத்துடன் சொன்னார். முடிக்கும்போது புதுப்பேட்டை படத்தில் இருந்து 'ஒரு நாளில் வாழ்க்கை' பாடலை பாடி தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று கூற போட்டியாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு அவரை பாராட்டினர்.

Next Story