1. Home
  2. Bigg boss

Biggboss Season 8 Tamil: பிரதீப்பின் ஆதரவு எந்த போட்டியாளருக்குன்னு பாருங்க?


Biggboss season 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர் பிரதீப். நடிகர் கவினின் சிறந்த நண்பர் மற்றும் நடிகர் என்பதால் 7-வது சீஸனின் டைட்டில் இவருக்கு தான் என நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பார்வையாளர்கள் ஆரூடம் கூறினர்.

அதற்கு ஏற்றவாறு பிக்பாஸ் சீசனுக்கு என்றே அளந்து செய்த போட்டியாளராக பிரதீப் இருந்தார். ஆட்டத்தை சரியாக விளையாண்ட இவர் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை. ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் மத்தியில் தகராறு, சீரியஸான விஷயங்களை அலட்சியமாக கையாண்டது என நெகட்டிவிட்டியில் சிக்கிக் கொண்டார்.

ஒருகட்டத்தில் இவர் அமைதியாக இருந்தாலும் பெண்கள் அணி சும்மா இல்லாமல் புகார்களை அடுக்க, சீசனில் இருந்து ரெட் கார்டு அளித்து வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்தும் துடுக்குத்தனமாக பேசுவது, சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவது என்று நடந்து கொண்டார்.

இதனால் அதற்கு பிறகு பிக்பாஸ் தொடர்பான எந்தவொரு கொண்டாட்டங்களிலும் பிரதீப்பிற்கு அழைப்பில்லை. இந்தநிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் இவரின் பெயர் அடிபடலாம் என தெரிகிறது.

இந்த வாரம் வீட்டிற்குள் செல்லும் ஐந்து வைல்டு கார்டு போட்டியாளர்களில் வர்ஷினி வெங்கட்டும் ஒருவர். இவர் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு பிரதீப்புடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

இதன் மூலம் பிரதீப்பின் ஆதரவு வர்ஷினிக்கு தான் என்பது தெரிகிறது. வர்ஷினி உள்ளே விளையாடும் போது அவருக்கு ஆதரவாக பிரதீப் வெளியில் இருந்து போஸ்டுகள் போடலாம். பிரதீப் ஆதரவு பெற்றவர் என்பதால் அவரது பரம விசிறிகளும் தங்களது பொன்னான வாக்குகளை வர்ஷினிக்கே அளிப்பார்கள்.

எனவே வரும் வாரங்களில் இந்த ஆட்டம் சற்றேனும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.




கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.