BiggbossTamil: பிக் பாஸ் தமிழ் சீசன்8 விறுவிறுப்பாக நடந்து கொண்டு வரும் நிலையில் தற்போது போட்டியாளர் ஒருவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்த பதிவு ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ். நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரீச்சுக்கும் காரணம் அவர்தான். ஆனால் அவர் இந்த சீசனை தொகுத்து வழங்குவதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த இடத்தில் விஜய் சேதுபதி களமிறங்கினார்.
இவரால் இதன் சூட்டை தாங்க முடியுமா என பல கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் நான் வில்லன் என்பதை அசால்டாக நிரூபிக்கும் மாதிரி முதல் நாள் எபிசோடு பட்டையை கிளப்பினார். வரும் போட்டியாளர்களுக்கு ஐஸ் வைக்காமல் முகத்தில் அடித்து அது போல அவருக்கு தோன்றிய விஷயங்களை கூறினார்.
தயாரிப்பாளர் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், அர்னவ் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் அவர்களின் கருத்துக்கு மாற்று கருத்தை அசால்டாக வைத்தார். செளந்தர்யா மற்றும் தர்ஷிகா போன்ற பெண் போட்டியாளர்கள் தங்களை தாழ்வு மனப்பான்மையோடு நினைத்துக் கொண்ட போது அவர்களுக்கு அட்வைஸ்சும் கொடுத்து அனுப்பினார்.
நடிகர் ரஞ்சித் பொதுவாகவே காதல் போன்ற விஷயங்களுக்கு எதிரானவர். அவர் பிக் பாஸுக்குள் செல்லும்போது நிகழ்ச்சியில் கலவரம் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதுபோலவே நேற்று வெளியான எபிசோடில் தயாரிப்பாளர் ரவீந்தருடன் அவர் முட்டி மோதிக்கொண்டார்.
ஆனால் அது கடைசியில் இவர்கள் திட்டம் போட்டு போட்ட பிராங்க் சண்டை என அறிவித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தனர். அந்த சண்டை முடிந்த பின்னர் ரஞ்சித் அங்கிருந்த பெண்களிடம் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும் என நடந்து கொண்டார். தற்போது இது சமூக வலைத்தளங்களில் விவாதம் ஆகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…