Categories: latest news

Biggboss Tamil 8: எல்லார் முன்னாடியும் ‘பாட்டிலை’ தொறந்து… கதறிய போட்டியாளர்!

பிக்பாஸ் வீட்டின் கடந்து வந்த பாதை டாஸ்கில் தர்ஷிகா தன்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘சின்ன வயசுல அப்பா என்னையும், அம்மாவையும் விட்டுட்டு போய்ட்டாரு.

எங்க அப்பாக்கு இப்போ என்ன அடையாளம் தெரியாது. ஏன்னா அவரு அதுக்கு அப்புறம் எங்களை வந்து பாக்கவே இல்லை. இப்போ இந்த மேடையில நான் உட்கார்ந்து இருக்கேன். அவரு இத தெரிஞ்சிக்கணும் நினைக்குறேன்.

அப்பா விட்டுட்டு போனதும் அம்மாவும், நானும் மாமா வீட்டுல கொஞ்ச நாள் இருந்தோம். என்னோட ஸ்கூல் பீஸ்க்கு (250 ரூபாய்) அம்மா, மாமாகிட்ட தான் பணம் கேட்பாங்க. அவரு வேலை முடிச்சு வர்றவரைக்கும் வெயிட் பண்ணுவாங்க.

நாலாவது படிச்சிட்டு இருந்தேன். ஒருநாள் மாமா ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிட்டு வர சொன்னாரு. அவரு சொன்னது இல்லாம வேற ஒரு கூல்டிரிங்ஸ் மாத்தி வாங்கிட்டு வந்துட்டேன். நடு ஹால்ல நிக்கவச்சு சில்லுனு இருந்த கூல்ட்ரிங்ஸ என் தலையில ஊத்துனாரு.

#image_title

என் அம்மாவால ஒண்ணும் சொல்ல முடியாம வேடிக்கை பாத்துட்டு இருந்தாங்க. ஒருகட்டத்துல அவங்க வீட்டைவிட்டு வெளிய வந்தோம். பாட்டியும் கூட வந்தாங்க. ரொம்ப பாசமா பாத்துக்கிட்டாங்க. என் அம்மாவுக்கு கொஞ்சம் பியூட்டீஷியன் தெரியும். அதனால அத வச்சு வாழ்க்கையை ஓட்டினோம். இன்ஜினியரிங் படிச்சேன்.

என்ன எல்லாருக்கும் தெரியணும்னு தான் மீடியாவுக்கு வந்தேன். மும்பை போய் கஷ்டப்பட்டேன். திரும்ப சென்னை வந்து மறுபடியும் ஸ்டார்ட் பண்ணேன். விஜய் டிவிக்கு வரணும்னு ஆசைப்பட்டேன். எல்லாமே நடந்துச்சு. அம்மாவுக்கு தாலி வாங்கி கொடுத்தேன்.

நமக்கு ஹஸ்பண்ட் இல்லனு எங்க அம்மா வருத்தப்பட்டு இருப்பாங்க. அதனால அப்படி செய்தேன். 19 வயசுல இருந்து ஓடிட்டு இருக்கேன். எங்க அம்மாவை நல்லா பாத்துக்கணும். என்று உருக்கமாக பேசி ‘இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாற’ என்ற பாடலுடன் முடித்தார்.

ராம் சுதன்

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

15 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago