Biggboss
Biggboss Tamil: பிக்பாஸ் வீட்டில் மோதல்.. உச்சக்கட்ட பரபரப்பு… வெளியான புரோமோ!
பிக்பாஸ் தமிழ் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது
Biggboss Tamil: பிக் பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஒருவருக்கொருவர் மாற்றி சண்டை செய்து கொண்டிருக்கின்றனர்.
பிக் பாஸ் சீசன் 8 தொடங்கி நடந்து வருகிறது. கடந்த சீசனில் இரண்டு வீடாக பிரிந்த பிக் பாஸ் இந்த முறை இரண்டு டீமாக பிரிந்து இருக்கிறது. ஆண்கள் ஒரு பக்கமும் பெண்கள் ஒரு பக்கமும் வீட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் இன்னொருவரை தங்கள் வீட்டிற்குள் விட சில விதிமுறைகளையும் அமைத்துள்ளனர்.
இதில் பெண்கள் அணி தங்களுடைய விதிகளில் ரொம்பவே கவனமாக இருக்கின்றனர். ஆனால் சில சமயங்களில் ஆண்கள் அணி அதில் தவறவிட பிரச்சனை வெடிக்க தொடங்கியது. சச்சனாவுக்கு உடல்நிலை பிரச்னை ஏற்பட்ட போது அருண் தூக்கி சென்றார்.
அப்போது வீட்டை கடந்த போதும் பெண் அணி பிரச்னை செய்தது. அதுபோல தற்போது பெண்கள் பக்கம் வந்தாலும் 30 நொடிக்குள் ஆண்கள் வெளியேற வேண்டும் என புதிய விதியை கொடுத்துள்ளனர்.
இது தற்போது மோதலாக வெடித்துள்ளது. இதற்காக கோட்டுக்கு நடுவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி மோதிக்கொண்டு இருக்கின்றனர். இதில் பெரிய அளவில் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பிக்பாஸ் என்ன ஆலோசனை தருவார் எனவும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.