இந்த வாரம் பிக்பாஸ் எவிக்‌ஷன் இவர்தான்?!.. கண்டெண்ட் கொடுத்தும் வீணாப் போச்சே!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 11:08:05  )
இந்த வாரம் பிக்பாஸ் எவிக்‌ஷன் இவர்தான்?!.. கண்டெண்ட் கொடுத்தும் வீணாப் போச்சே!...
X

Biggboss tamil: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 8வது சீசனை எட்டியிருக்கிறது. இதுவரை 7 சீசன்களை கமல்ஹாசன் நடத்திய நிலையில், இந்த சீசனை விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். கமல் போல அவரால் நிகழ்ச்சியை நடத்த முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், முதல் நாளே ஸ்கோர் பண்ணி அப்ளாஸ் வாங்கினார் விஜய் சேதுபதி.

இந்த முறை 18 போட்டியாளர்கள் உள்ளே போயிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் விஜய் டிவி சீரியல்களில் நடிப்பவர்கள். நடிகர் ரஞ்சித் உள்பட பலரும் உள்ளே இருக்கிறார்கள். நிகழ்ச்சி துவங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த சாச்சனாவும் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே போனார்.

ஆனால், உள்ளே போன 24 மணி நேரத்தில் சாச்சனா வெளியே அனுப்பப்பட்டார். இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. அதற்கு காரணம் உள்ளே போனவுடன் விளையாட வந்திருக்கிறோம் என்பதை மறந்து மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொள்வது போல எண்ணி ‘ஆண்கள் நம்மை டார்கெட் செய்தால் முதல் ஆளாக நான் வெளியே போக தயாராக இருக்கிறேன்’ என பேசினார்.

இதைத்தொடர்ந்தே அவர் வெளியே அனுப்பப்பட்டார். அதன்பின் விஜய் சேதுபதியின் ரெக்கமண்டேஷனில் அவரை மீண்டும் உள்ளே கொண்டு வந்திருப்பார்கள் என கணிக்கப்படுகிறது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எவிக்‌ஷன் பிராசஸ் நடக்கும். ஆனால், முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இருக்காது.

ஆனால், இந்தமுறை முதல் வாரமே எவிக்‌ஷன் பிராசஸ் நடந்தது. Fatman ரவீந்தர், நடிகர் ரஞ்சித், ஜாக்குலின், முத்து குமரன், அருண் பிரசாத், சவுந்தர்யா ஆகிய 6 பேர் எலுமினேஷனில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தயாரிப்பாளர் Fatman ரவீந்தரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதாக இப்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மக்களிடமிருந்து குறைவான வாக்குகளை பெற்றதால் அவர் வெளியேற்றப்பட்டார் என சொல்லப்படுகிறது. எப்படியும் நாளை இரவு இதுபற்றி வெளியே தெரிந்துவிடும்.

Next Story