1. Home
  2. Bigg boss

16 இல்ல 18… Fatman முதல் கானா பாடகர் வரை… முதல் எட்டு போட்டியாளர்கள் இவர்கள்தான்!...

முதல் போட்டியாளர்களின் தொகுப்பு

BiggbossTamil8: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் வீட்டுக்குள் சென்று இருக்கும் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் இதுதான். அந்த வகையில் முதல் எட்டு பேரின் விவரங்கள்.

Fatman ரவீந்தர்: தமிழ்சினிமாவில் தொகுப்பாளர் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இவர் செய்த விமர்சனங்கள்தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அடுத்து சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து வைரலானார். தற்போது முதல் போட்டியாளராகி இருக்கிறார்.

சாச்சனா: மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார். சின்ன பெண்ணாக இருப்பார் என நினைத்த நிலையில் அம்மணிக்கு 21 வயதாம். விஜய் சேதுபதி அப்பானு கூப்பிட்டுக்கோ என சலுகை கொடுத்து இரண்டாவது ஆளாக உள்ளே அனுப்பி இருக்கிறார்.

தர்ஷா குப்தா: விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் இரண்டில் கலந்து கொண்டவர். கிளாமர் நாயகியாக சீரியல்களிலும் வலம் வந்தார். சோஷியல் மீடியாக்களில் வைரலாக வலம் வரும் தர்ஷா குப்தா மூன்றாவது போட்டியாளராக உள்ளே வந்திருக்கிறார்.

சத்யா: சின்னத்திரையில் நடிகராக வலம் வந்தவர் சத்யா. கட்டுமஸ்தான உடம்பு, மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். இவரின் மனைவி ரம்யா என்எஸ்கே இரண்டாவது சீசனில் பிக்பாஸ் சென்றார். ஆனால் கண்டெண்ட்டே கொடுக்காமல் வெளியேறினார். மனைவி போல் இருக்க கூடாது என்ற அறிவுரையுடன் உள்ளே சென்று இருக்கிறார்.

தீபக்: பல வருடமாக சின்னத்திரையில் இருப்பவர். விஜய் டிவியின் முதல் ஆங்கர் என்று கூட சொல்லலாம். வயசே ஆகாதா சார் உங்களுக்கு என்ற கேள்விக்கு அப்பட்டமான உதாரணம். தற்போது எந்த சீரியலும் கைவசம் இல்லாதவர். பிக்பாஸ் வீட்டின் ஐந்தாவது போட்டியாளராகி இருக்கிறார்.

ஆனந்தி: கோலிவுட்டில் சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் யூட்ட்யூப்பில் புத்தக விமர்சனங்களில் ஹிட்டடித்தவர். கொஞ்சம் ஸ்ட்ராங் என்பதால் கண்டெண்ட் அதிகம்தான்.

சுனிதா: விஜய் டிவியின் பக்கா பிராடெக்ட். நடனத்தால் ஹிட்டடித்தவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நல்ல ரீச் கிடைத்தது. ஆனால் சமீபத்தில் மணிமேகலை பிரச்னையில் பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோ போட நெகட்டிவ் இமேஜுடன் உள்ளே வந்திருக்கிறார்.

ஜெஃப்ரி: எப்போதும் போல கானா பாடகர் எண்ட்ரியாக ஜெஃப்ரி உள்ளே வந்திருக்கிறார். பால் டப்பா பெயர் அடிப்பட்ட நிலையில் அந்த கேட்டகிரியில் ஜெஃப்ரி எண்ட்ரி ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவர் இனிமேல் தான் ரசிகர்களிடம் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் இங்கு பிரச்னையே.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.