1. Home
  2. Bigg boss

இந்தி பிக்பாஸையே தமிழில் பேச வைத்த ஸ்ருதிகா… வைரலாகும் வீடியோ… என்ன சொல்றாரு பாருங்க..

இந்தி பிக்பாஸ் புரோமோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

Shrutika: நடிகை ஸ்ருதிகா பிக்பாஸ் எண்ட்ரி நாளுக்கு நாள் சூடு பிடித்து கொண்டு இருக்கும் நிலையில் நேற்றைய புரோமோ ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இதற்கு விதிவிலக்காக வார இறுதியில் விஜய் சேதுபதி செய்யும் தக் மூவ்மெண்ட்கள் மட்டுமே தற்போது ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்து இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க தென்னிந்தியாவிலிருந்து முதல் முறையாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ருதிகா. பொதுவாக ஸ்ருதிகா குழந்தைத்தனமாக பேசும் பழக்கம் உள்ளவர். அவரைக் கூப்பிட்டு கோமாளிகையில் முழுதாக பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமே அது தெரியும்.

இத்தகைய கேரக்டருடன் அவர் ஹிந்தி பிக் பாஸிற்குள் நுழைந்த முதல் நாள் வட இந்திய ரசிகர்களுக்கு பெரிய அளவில் அவர் மீது எதிர்பார்ப்பு உருவாகவில்லை. இருந்தும் தொடர்ச்சியாக ஸ்ருதிகாவை பார்த்து வந்த ரசிகர்கள் அவருக்கு லைக்ஸ் குவிக்க தொடங்கினர்.

வார இறுதி எபிசோட்களில் சல்மான் கான் வரை ஸ்ருதிகாவை கலாய்த்து வருவது வழக்கமாக இருக்கிறது. ஸ்ருதிகா கணவர் அர்ஜூன் ஜாலியாக பாங்காக் சென்றுவிட்டதாகவும் எல்லாரும் தொடர்ச்சியாக கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிகா நேற்று பிக்பாஸுடன் பேசும்போது தன்னுடைய கணவருக்கு தமிழில் மிரட்டல் விடுத்துள்ளார். ஸ்ருதிகா பேச அதுபோலவே பிக்பாஸும் பேச புரோமோ வைரலாகி வருகிறது. தமிழில் இந்தி பிக்பாஸ் பேசுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.