1. Home
  2. Bigg boss

ரவீந்தர் வெளிய போனது நல்லதுதான்!.. வேற ஆங்கிளில் யோசிக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!...

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ரவீந்தர் வெளியேறியது பற்றி ரசிகர்கள் சொல்வதை பார்ப்போம்...

Biggboss raveendar: கோலிவுட்டில் தயாரிப்பாளராக ரசிகர்களிடம் அறிமுகமானவர் ரவீந்தரன். சுட்ட கதை, நட்புன்னா என்ன தெரியுமா, முருங்கைகாய் சிப்ஸ் உள்ளிட்ட சில திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும், யுடியூப், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பல விஷயங்கள் பற்றி பேசியும் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

வனிதா விஜயகுமார் பீட்டர் என்பவரை திருமணம் செய்த போது அது தவறு என தொடர்ந்து வீடியோவில் பேசி வனிதாவிடம் சண்டை போட்டார். கடந்த பிக்பாஸ் சீசன் நடந்த போது தொடர்ந்து அது பற்றி வீடியோவில் பேசி வந்தார். டிவி சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.

ஒருபக்கம், பண மோசடி வழக்கிலும் சிக்கி சிறைக்கு போனார். தற்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ரவீந்தரிடம் சண்டை போட்ட வனிதாவே விஜய் டிவியில் ரெக்கமண்ட் செய்து ரவீந்தருக்கு இந்த வாய்ப்பை வாங்கி கொடுத்தார்.

ஆனால், முதல் வாரத்திலேயெ எலிமினேட் ஆகி வெளியே போயிருக்கிறார் ரவீந்தர். உடல் பருமன் காரணமாக அவரால் டாஸ்க்குகளை விளையாட முடியவில்லை. அதோடு, உட்கார்ந்தே இருக்கும் அவருக்கு தண்ணிர் முதல் கொண்டு மற்றவர்களே எடுத்து கொடுத்து வந்தனர். ஆனால், பிராங்க் என வந்ததும் சுறுசுறுப்பாக இயங்கி விளையாடினார் ரவீந்தர்.

ஆனாலும், குறைவான வாக்குகளை பெற்று வெளியேறி இருக்கிறார். வெளியேறுவதற்கு முன் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எல்லோரிடமும் அவர்களின் குறைகளை பளிச்சென சொல்லியிருக்கிறார் ரவீந்தார். இந்நிலையில், ரவீந்தர் வெளியேறியது நல்லதுதான் என்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.

அவரின் உடல்நிலை காரணமாக அவரால் கடினமான டாஸ்குகளை நிச்சயம் செய்ய முடியாது. அப்படி ஆகும்போது மற்ற போட்டியாளர்கள் கேலி செய்வார்கள். அதுவே அவருக்கு மன உளைச்சலையும் கொடுத்திருக்கும். அது அவரின் தன்னம்பிக்கையை இழக்க வைக்கும். இதையெல்லாம் யோசிக்கும்போது ரவீந்தர் வெளியேறியது அவருக்கு நல்லதுதான்’ என சொல்கிறார்கள் ரசிகர்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.