என் பொண்டாட்டி அப்பவே சொன்னா!.. அங்க போனா அசிங்கப்படுவேன்னு!.. அழுது புலம்பிய ஃபேட்மேன்!..

by ராம் சுதன் |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறி விட்டார் என தகவல்கள் வழக்கம்போல கசிந்து விட்டன. நேற்று நடைபெற்ற சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி அனைவரையும் வைத்துக்கொண்டு ரவீந்தருக்கு எதிராக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரஞ்சித் தன்னை ரவீந்தர் ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அருண் பிரசாத் மற்றும் விஜே விஷால் என ஆண்கள் அணியில் இருந்த போட்டியாளர்கள் ரவீந்தருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால் கடைசியில் விஜய் சேதுபதி, ரவீந்தர் முன்னதாகவே நாமினேஷன் குறித்து உங்களிடம் பேசி விட்டு தான் அந்த பிராங்க் டிராமாவை நடத்தினார் என்றதும் ரவீந்தர் உடைந்து போய்விட்டார்.

என் மனைவி மகாலட்சுமி அப்பவே சொன்னா பிக்பாஸ் வீட்டுக்கு போகாதீங்க, அவ பேச்சைக் கேட்காம இங்க வந்து அசிங்கப்பட்டது தான் மிச்சம் என ரவீந்தர் புலம்பிய காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தின.

இந்த வாரம் குறைவான ஓட்டுக்கள் உடன் விஜய் டிவியின் ஜாக்குலின் தான் கடைசி இடத்தில் இருந்ததாக ஆஃப்லைன் போல்கள் அறிவித்து வந்த நிலையில், பிராங்க் வீடியோ மற்றும் தனது பேச்சால் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த ரவிந்தர் சந்திரசேகர் அநியாயமாக இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்றும் வெளியே சென்று பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்க விடுவார் என ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

முதல் வார சனிக்கிழமை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கியதை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசனை விட விஜய் சேதுபதியின் ஹோஸ்ட்டிங் சிறப்பான சம்பவமாக உள்ளது எனக் கூறி வருகின்றனர்.

Next Story