Shrutika: பிக் பாஸ் ஹிந்தி சீசன் 18 கலந்து கொண்டிருக்கும் தென்னிந்திய நடிகை ஸ்ருதிகா கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருவது தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் வைரலானவர் நடிகை ஸ்ருதிகா. அந்த நிகழ்ச்சியில் குழந்தைத்தனமாக அவரின் பேச்சும், சேட்டையும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவும் மகுடம் சூட்டினார்.
இதை தொடர்ந்து நடிகை ஸ்ருதிகாவிற்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தனர். இந்த புகழுடன் நடிகை ஸ்ருதிகா தற்போது பிக் பாஸ் ஹிந்தி சீசன் 18ல் கலந்து கொண்டிருக்கிறார். தென்னிந்தியாவிலிருந்து ஹிந்தி பிக்பாஸில் இணைந்திருக்கும் முதல் நடிகை என்ற அந்தஸ்தையும் ஸ்ருதிகா பெற்றிருக்கிறார்.
எண்ட்ரி கொடுத்த முதல் நாளே தான் நடித்த நான்கு படங்களும் பக்கா பிளாப் என பேசி ஆச்சரியப்படுத்தினார். தொடர்ந்து அவருடைய கணவர் குறித்து பேசி புலம்பிக்கொண்டும், காபி கொடுக்காததால் அழுது கொண்டும் ஸ்ருதிகாவின் ஆர்ப்பாட்டம் ரசிகர்களால் வரவேற்பை பெற்றது.
ஸ்ருதிகா சிரித்துக்கொண்டே இந்த நிகழ்ச்சியை அவர் கடந்து சென்று விடுவார் என தான் பலரும் நினைத்திருந்தனர். ஆனால் தான் தேவையான நேரத்தில் தேவையானதை பேச மறந்து விட மாட்டேன் என்பதை ஸ்ருதிகா தற்போது நிரூபித்து இருக்கிறார்.
இந்த வாரத்தின் துவக்கத்தில் சக போட்டியாளரும், நடிகருமான அவினாஷ் குறித்து பேசும்போது அவருக்கு தக்க பதிலடி கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் நேற்று அவினாஷ் நடவடிக்கை சரியில்லை என ஸ்ருதிகா பேசினார்.
அப்பொழுது அவினாஷ் ஸ்ருதிகாவை கெட் அவுட் என திட்டினார். அதற்கு ஸ்ருதிகா அதை சொல்ல உனக்கு உரிமை இல்லை எனப் பேசிய புரோமோ வைரலாகி வருகிறது. தேவையில்லாமல் சண்டை போட்டால் தானும் அதுக்கு தக்க பதிலடி கொடுப்பேன் என்பதையும் பேசி இருப்பது அப்ளாஸை குவித்துள்ளது.
Vijay serials:…
கங்குவா படம்…
கங்குவா படம்…
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…