1. Home
  2. Bigg boss

அய்யோ போச்சு… தலை குனிஞ்ச ஸ்ருதிகா… சீசீ கேள்வி கேட்ட சல்மான்கான்…

ஸ்ருதிகா தற்போது இந்தி பிக்பாஸில் வெற்றி நடைபோட்டு வருகிறார்

Shrutika: நடிகை ஸ்ருதிகா தற்போது இந்தி பிக்பாஸில் விளையாடி வருகிறார். அவர் தொடர்ந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெரும் நிலையில் சல்மான்கானிடமே அடிக்கடி கலாய் வாங்கி வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழில் நடிகையாக தோல்வி கண்டவர் தான் ஸ்ருதிகா. இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்து கொண்டார். அதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்தே குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். தொடர்ச்சியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

இதில் அந்த சீசனின் வெற்றியாளராகவும் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். சில ஆண்டுகள் கழித்து ஸ்ருதிகா பிக்பாஸ் இந்தியில் நடக்கும் 18வது சீசனில் கலந்து கொண்டு இருக்கிறார். முதல் நாளில் இருந்தே ஸ்ருதிகா செம வரவேற்பை பெற்றுள்ளார். நான் நான்கு படங்களில் ஹீரோயினாக நடித்தேன். எல்லாமே பாக்ஸ் ஆபிஸ் தோல்வி எனப் பேசியதே லைக்ஸ் குவித்தது.

சக போட்டியாளர்களிடம் ஸ்ருதிகா தன் கணவர் குறித்து பேசிக்கொண்டு இருப்பார். அப்போது அவர் தற்போது பாங்காக் பறந்து ஜாலியாக இருப்பார் எனப் பேசி இருந்தனர். இதனை கடந்த வாரம் சல்மான்கான் தன் வார இறுதி நிகழ்ச்சியிலேயே கலாய்த்தார்.

தற்போது இந்த வாரம் ஸ்ருதிகா காபி இல்லை என அழுதுக்கொண்டு இருந்தது வைரலான நிலையில் அவர் தன்னால் பாத்ரூம் செல்ல முடியவில்லை எனவும் பேசி இருப்பார். அதை தொடர்ந்து இந்த வாரத்தில் பேசி இருந்த சல்மான் இங்கு மனம் சுத்தமாக இல்லை என்றாலும் வயிறு சுத்தமாக இருக்க வேண்டும் என பேசி இருப்பார்.

இதை கேட்ட போட்டியாளர்கள் கலாய்த்து சிரிக்க ஸ்ருதிகாவோ அச்சோ அதை நீங்க பார்த்தீங்களா? ஏன் சார் பார்த்தீங்க என சிரித்துக்கொண்டே கேட்டு இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.