நெற்றியில் முத்தம் கொடுத்தா என்ன தப்பு? அதுக்கு அர்த்தமே வேறயாம்..!வனிதா சொல்றாங்க...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:33  )

நடிகை வனிதா அவ்வப்போது துணிச்சலாகக் கருத்துகளை சொல்வார். அது சர்ச்சையாகி வருவது வாடிக்கை.

பிக்பாஸ் சீசன் தொடங்கியதில் இருந்தே நடிகை வனிதா எதையாவது சொல்லி ட்ரோலில் சிக்கி வருகிறார். அதுக்குக் காரணம் அவருக்குள் இருக்கும் ஆர்வம். ஏற்கனவே பிக்பாஸ் சீசனில் இருந்தவர். கமல் இருந்தப்போ அவரது ஸ்டைல் வேறு. இப்போ விஜய் சேதுபதி வேறு வகையில் நடத்திச் செல்கிறார்னு வனிதா முதல்ல பேசியிருந்தாங்க.

சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 8ல் நடிகர் சத்யா அணிந்த டிரஸ் ரொம்ப ஆபாசமா இருந்ததாகச் சொன்னார். அவர் பிக்பாஸ்ல இருக்கும் போது போட்ட டிரஸ் எல்லாம் அவருக்கு மறந்து போனதான்னு ரசிகர்கள் அவரது ஸ்டேட்மெண்ட்டுக்குப் பதிலடியும் கொடுத்தனர்.

பிக்பாஸ் சீசன் 8ல் ரஞ்சித்துக்கும், பேட்மேன் உள்பட பலருக்கும் சண்டை வரவே அவர்களை சமாதானப்படுத்த ஜாக்குலினும், சௌந்தர்யாவும் முயற்சிக்கிறாங்க. அப்போ ஒரு கட்டத்தில் அவர்கள் பிராங்க் செய்றது தெரிஞ்சிடுது. உடனே ஜாக்குலின் அழுறாங்க. உடனே சௌந்தர்யா நெற்றியில் ஒரு கிஸ் கொடுக்கிறார் ரஞ்சித். ஜாக்குலின் கன்னத்தையும் செல்லமாகக் கிள்ளி விடுகிறார்.

இது குறித்து வனிதா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ரஞ்சித் ஒரு இயக்குனர். அவர் தவறாக எல்லாம் நடந்து கொள்ள மாட்டார். அவர் கொடுத்தது புனிதமான முத்தம்.

நெத்தில கொடுத்துள்ளார். தவறான முத்தம் கிடையாது. அது நம்ம பார்க்குற கண்ணோட்டத்துல இருக்கு. அண்ணன் தங்கைக்கு கொடுக்குற முத்தம் மாதிரின்னு ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார் நடிகை வனிதா.

பிக்பாஸ் சீசன் ஆரம்பித்துவிட்டாலே பலருக்கும் ஒரு ஜூரம் வந்துவிடும். தினமும் அந்த நேரம் வந்துவிட்டால் டிவி முன் உட்கார்ந்து விட வேண்டும். அவர்கள் செய்யும் அத்தனை அலப்பறைகளையும் கண்டு சிரித்து அவர்கள் அழுதால் அழுது விட வேண்டும். அவர்கள் ரொமான்ஸ் செய்தால் இவர்களுக்கு சந்தோஷம். அவர்கள் ஆட்டம்போட்டால் இவர்களும் ஆடுகிறார்கள். அப்படி ஒரு மோகத்தை உண்டாக்கி விட்டது.

அதற்குக் காரணம் டாஸ்க்குகள். இவர்கள் செய்யும் வேலைகள், விளையாட்டுகள், சிண்டு முடித்தல் என பல விஷயங்களும் டிஆர்பியை எகிற வைப்பதற்காகவே செய்யும் வேலையாக இருக்கிறது. இப்போது கமலுக்குப் பதில் விஜய் சேதுபதி. வரும் வாரங்களில் எப்படி இருக்கும்னு பார்க்கலாம்.

Next Story