1. Home
  2. Bigg boss

Biggboss Tamil: கமல் பண்ணத பண்ண நான் இங்க வரல!.. பிக்பாஸ் போறதுக்கு முன் விஜய் சேதுபதி சொன்னது இதுதான்!..

Biggboss Tamil: கமல் பண்ணத பண்ண நான் இங்க வரல!.. பிக்பாஸ் போறதுக்கு முன் விஜய் சேதுபதி சொன்னது இதுதான்!..

Biggboss Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது முதலில் இந்தியாவிலேயே இல்லை. அது அமெரிக்காவில் ஒரு டிவி நிகழ்ச்சியாக இருந்தது. அதன்பின் இந்தியாவில் ஹிந்தியில் முதலில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அதற்கு நல்ல டி.ஆர்.பியும், ரசிகர்களிடம் வரவேற்பும் இருந்ததால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்ண்டம் ஆகிய மொழிகளிலும் உருவாக துவங்கியது.

தமிழை பொறுத்தவரை விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. முதல் சீசனை நடிகர் கமல்ஹாசன் நடத்துவதாக அறிவிக்கப்பட்டதும் எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஏனெனில், கமல்ஹாசன் இதுவரை சினிமாவில் ஒரு நடிகனாக மட்டுமே ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள்.

எனவே, அவர் எப்படி ஒரு டிவி நிகழ்ச்சியில் என பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், தனது பேச்சு திறமை, ஆளுமை, அனுபவம் ஆகியவற்றால் நிகழ்ச்சியை சிறப்பாகவே நடத்தினார் கமல். அதோடு, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையின் போதும் நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

Biggboss Tamil: கமல் பண்ணத பண்ண நான் இங்க வரல!.. பிக்பாஸ் போறதுக்கு முன் விஜய் சேதுபதி சொன்னது இதுதான்!..


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல டி.ஆர்.பி வரவே கமலே தொடர்ந்து 7 சீசன்களையும் நடத்தினார். இதற்காக அவருக்கு பல கோடிகள் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அதே நேரம், கடந்த 7வது சீசனில் பிரதீப்பை அவர் வெளியேற்றியது தவறான முடிவு என பலரும் விமர்சனம் செய்தனர்.

தற்போது 8வது சீசன் துவங்கியுள்ள நிலையில் இதை விஜய் சேதுபதி நடத்தி வருகிறார். இந்த அறிவிப்பு வெளியானதுமே 'கமல் போல விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சிறப்பாக செய்வாரா?' என பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், தனது ஸ்டைலில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் விஜய் சேதுபதி. கமல் போல மென்மையாக பேசாமல் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை பட் பட் என பேசி போட்டியாளர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார் விஜய் சேதுபதி.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ‘கமல் சார் பண்ணத தோற்கடிக்க நான் வரவில்லை. சார் ஒன்னு பண்ணிட்டு போயிருக்காரு.. அதே மாதிரி எனக்கு பண்ண வராது.. எனக்கு பிடிச்ச மாதிரி ஒன்னு பண்றேன்.. எனக்கு வருவதை நான் பண்றேன்.. அது எப்படி இருக்குன்னு பார்ப்போம்’ என சொல்லிவிட்டுதான் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்த வந்தார் என விஜய் சேதுபதியின் மகன் சூர்யா பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.