1. Home
  2. Bigg boss

என்னையாடா சொன்னீங்க!.. பிக்பாஸில் கெத்து காட்டி நிரூபித்த விஜய் சேதுபதி!. முதல் நாளே கலக்கிட்டாரே!..

நேற்று துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்திய விதம் பாராட்டை பெற்றிருக்கிறது.

Biggboss 8 :பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று விஜய் டிவியில் துவங்கியது. இதற்கு முன் நடந்து முடிந்த 7 சீசன்களையும் கமலே நடத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்திய விதம் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஏனெனில், அவரின் வயது, அனுபவம், திறமை எல்லாம் சேர்ந்து அவரிடம் ஆளுமை தெரிந்தது.

அதோடு, தனது ஸ்டைலில் பேசி போட்டியாளர்களை சரியாக வழிநடத்தி தவறுகளை சுட்டிக்காட்டினார் கமல். இந்நிலையில்தான், 8வது சீசனை விஜய் சேதுபதி நடத்தவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்றாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அவரிடம் ஆளுமை இருக்குமா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்தது.

ஏனெனில், எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர் விஜய் சேதுபதி. அதோடு, மிகவும் தத்துவார்த்தமாக பேசுபவர். பல மேடைகளிலும், பேட்டிகளிலும் ரசிகர்கள் இதை பார்த்திருக்கிறார்கள். இவர் போட்டியாளர்களிடம் கறாராக பேசுவாரா?.. அவர் எப்படி நிகழ்ச்சியை நடத்தப்போகிறார் என பலருக்கும் சந்தேகம் இருந்தது.

ஆனால், நேற்று முதல் நாள் போட்டியாளர்களை அறிமுகம் செய்யும்போது மனதில் பட்டதை பேசியும், அறிவுரை சொல்லியும் உள்ளே அனுப்பி வைத்து என்னால் இந்த நிகழ்ச்சியை சரியாக நடத்த முடியும் என நிரூபித்து காட்டிவிட்டார் விஜய் சேதுபதி. ஆர்வக்கோளாரில் பல போட்டியாளர்கள் உளறியபோதும் அதை திருத்தினார்.

சீரியல் நடிகர் அருண் ‘கலைக்காக வரவங்க யாரும் பணத்துக்காக வரமாட்டாங்க’ என ஓவர்டோஸில் சொல்ல, விஜய் சேதுபதியோ ‘நான் பணத்துக்காகத்தான் சார் நடிக்க வந்தேன்’ என இயல்பாக பேசினார். அதேபோல் அர்னவ் தன்னை புத்திசாலி போல காட்டிக்கொள்ள ஏதேதோ பேசினார். அதற்கு ‘உங்களுக்கு நான் ஒரு அறிவுரை சொல்கிறேன். உங்க வாழ்க்கையில் நல்லது நடக்கும்போது அதை பேசி கெடுத்துடுவீங்க’ என ஒரே போடு போட்டார்.

மேலும், ‘பிரச்சனைன்னு வந்துட்டா சண்டக்கோழி மாதிரி மோதுவேன். நாமலாம் ஆம்பள.. விட்ருவோமோ’ என ஆணாதிக்க சிந்தனையில் அர்னவ் பேசியபோது ‘ தைரியத்தில் ஆம்பள.. பொம்பள என்ன கணக்கு இது?’ என குட்டுவைத்தார் விஜய் சேதுபதி. அதேபோல், கவுண்டம்பாளையம் ரஞ்சித்திடம் அந்த படத்தின் புரமோஷன் நேரத்தில் அவர் சர்ச்சையாக பேசியதை சுட்டிக்காட்டினார் விஜய் சேதுபதி. அதற்கு ‘அது தவறுதான்’ என ஒப்புக்கொண்டார் ரஞ்சித்.

கீழே அமர்ந்திருந்த ரஞ்சித்தின் நண்பர் ஒருவர் ‘எங்க ஊர்ல எப்பவும் யாரை பாத்தாலும் சாப்டீங்களான்னுதான் கேட்போம்’ என சொல்ல, விஜய் சேதுபதி ‘எல்லா ஊர்லயும் அப்படிதான் சார் கேட்பாங்க. எங்க ஊர்ல மட்டும் வெளியா போங்கன்னா சொல்லுவோம்’ என மடக்கினார். இப்படி முதல் நாளிலேய் சிக்சர் அடித்து பிக்பாஸ் ரசிகர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார் விஜய் சேதுபதி.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘விஜய் சேதுபதி ஒரு முடிவோடதான் வந்திருக்கிறார்’.. பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் சரியா நடத்துவார்’ எனவும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.