பிக்பாஸ் சீசன் என்றாலே 7 வரை நமக்கு கமலை விட்டா வேற ஆள் இல்லைன்னு தான் தோணுச்சு… ஆனா விஜய் சேதுபதி என்ட்ரியாகி சீசன் 8க்குள் வந்ததும் ஆரம்பத்தில் அவரைப் பற்றி நெகடிவ்வான விமர்சனங்கள் வந்தன.
ஆனால் போகப் போக அவரைப் பார்த்து போட்டியாளர்களே அசந்துவிட்டனர். அவர்கள் என்ன கேட்டாலும் ‘ஷார்ட் அண்ட் ஸ்வீட்’டாக பதிலை சொல்கிறார். அதே நேரம் ஒளிவு மறைவு இல்லாமல் நேருக்கு நேராக நெத்தி அடியாய் அடிக்கிறார்.
ஒருத்தர் ‘டேடி’ன்னு மேலே காட்டுறாரு. அவர் அப்படி சொன்னதும் ‘பிக்பாஸை எடுத்துட்டு பிக்டேடின்னு வச்சிடலாமா’ன்னு கேட்குறார். ‘எல்லாரும் அவரு மேல உள்ள அன்புல சொல்றீங்களா? காக்கா புடிக்கிறதுக்கு சொல்றீங்களான்னு தெரியலங்க’றாரு விஜய் சேதுபதி.
ரவீந்தர் பேசுறாரு. ‘என்னோட பர்ஸ்பெக்ட்ல பர்ஸ்ட் நான் தான் உள்ளே வந்தேன். இவங்க மனசுல என்ன நினைக்கிறாங்கன்னு தெரியல’ங்கறாரு. அதுக்கு விஜய் சேதுபதி ‘சார் ரொம்ப நேரம் பேசுறீங்க சார். போர் அடிக்குது சார் எனக்கு’ன்னு ‘டப்’புன்னு சொல்லிடறாரு.
ஜாக்குலின் சொல்றாங்க. ‘டஃபான கன்டஸ்டன்ட்னு நான் நினைச்சி வெளிய வந்துட்டேன்’னு சொல்றாங்க. ‘அப்போ வெளிய வந்த உடனே சண்டை போட ஆரம்பிச்சிட்டீங்க. அப்படித்தானே’ன்னு விஜய் சேதுபதி கேட்குறார். ‘இல்ல நான் சண்டை போடல சார்’னு சொல்றாங்க. அடுத்த வினாடியே ‘இல்ல நீங்க இனிமையா பேச ஆரம்பிச்சிட்டீங்க’ன்னு சொல்றாரு விஜய் சேதுபதி.
‘நீங்க பேசுறது எனக்கு ஒருவேளை புரியலன்னு வச்சிக்கோங்க. நான் உங்களைக் கேள்வி கேட்குறன்னா எனக்குப் புரியற மாதிரி பதில் சொல்லுங்க’ன்னு சொல்றார் விஜய்சேதுபதி. அதுக்கு என்ன சொல்றாருன்னு ஒரு செகண்ட் ஜாக்குலின் டயர்டா யோசிக்கிறாங்க. அடுத்த செகண்டே விஜய்சேதுபதி ‘நீங்க டயர்டாகாதீங்க. உங்க எக்ஸ்பிரஷன் தெரியுது. நீங்க டயர்டாகுறீங்கன்னு’ சொல்றாரு. உடனே அவரது முகததில் அசடு வழியுது.
ரஞ்சித் பேசும்போது ‘ரஞ்சித் அப்படிங்கற நாமினேஷனுக்காக நடக்கக்கூடிய விஷயம்கற மாதிரி வேறொரு ஏரியாக்குலாம் போயிடுச்சு சார்’னு சொல்றாரு. ‘இதுக்கு யார் சார் ஸ்கிரீன்பிளே எழுதுறது?’ன்னு விஜய்சேதுபதி கேட்குறாரு. ‘இந்த சண்டைக்கு ஒரு ஸ்கிரீன்பிளே இருக்குல்ல. இப்படி போலாம். அப்படி போலாம்னு’. அப்படின்னு தெளிவா புரியற மாதிரி பேசுகிறார் விஜய்சேதுபதி.
தர்ஷா பேசும்போது ‘மத்தவங்க விட்டுக்கொடுக்கலங்கற மாதிரி சொல்றாங்க’. அப்போ விஜய்சேதுபதி ‘மத்தவங்க விட்டுக்கொடுக்கலாம்னு நீங்க நினைக்கிறீங்க அதானே’ன்னு கேட்குறாரு. உடனே இதான் சந்தர்ப்பம்னு ‘ஆமா சார்’னு சொல்றாங்க. உடனே ‘நீங்க ஏன் அதை விட்டுக்கொடுக்கறது இல்ல…’ன்னு நெத்தி அடியாய் கேள்வி கேட்கிறார் விஜய்சேதுபதி.
உடனே சிலர் மட்டும் கைதட்டுறாங்க. அதுக்கும் சொல்றாரு. ‘ஒண்ணு கைதட்டுறதா இருந்தா மொத்தமா தட்டுங்க’ன்னு… உடனே எல்லாரும் கிளாப்ஸ் அடிக்கிறாங்க. விசில் வேறு பறக்கிறது. உடனே சிச்சுவேஷனுக்கு ஏத்த மாதிரி ‘எனக்கும் தான் பசிக்குது. என்ன பண்றது? நான் கேப்ல போய் தண்ணித் தான் குடிச்சிட்டு வர்றேன். நம்புங்க’ன்னு சொல்றாரு.
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…