Categories: latest news

மிக்சர் தின்றவங்கள கேட்க துப்பு இல்ல… விளையாடுற போட்டியாளரை தடுக்கும் விஜய் சேதுபதி… நியாயமா கோபால்

Vijay Sethupathi: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில், எல்லாவற்றிற்குமே அவர் குறை சொல்வது தற்போது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் தமிழ் எட்டாவது சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சின்னத்திரை நடிகர்கள் அதிகமாக உள்ளே வந்திருப்பதால் பெரிய அளவில் ரசிகர்களுக்கு நிகழ்ச்சியில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறது. பொதுவாக உள்ளே வரும் போட்டியாளர்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் முடிந்த பின்னர் தங்களுடைய ஒரிஜினல் குணத்தை காட்டிவிடுவார்கள்.

ஆனால் உள்ளே வந்திருப்பது சின்னத்திரை நடிகர்கள் என்பதால் அவர்களுடைய தினசரி வேலையை கேமரா முன்னால் ஒரு முழு மாதம் கூட நடிப்பவர்கள் எப்படி தங்களுடைய ஒரிஜினல் முகத்தை காட்டுவார்கள். இதனால் பெரிய அளவில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கவில்லை.

ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என வீட்டை இரண்டாக பிரித்து வைத்துள்ளனர். இதில் ஒரு சில போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுத்து வருகின்றனர். ஆனால் மற்றவர்கள் எதையும் செய்யாமல் வெட்டியாக காலத்தை நகர்த்தி வருகின்றனர்.

இது குறித்து வார இறுதியில் இதுவரை விஜய் சேதுபதி எந்த கேள்வியையுமே கேட்கவில்லை. பொதுவாக கமல்ஹாசன் சும்மா இருக்கும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது கேள்வி கேட்டு அவர்களுடைய ஆட்டம் தவறாக செல்வதை புரிய வைத்துவிடுவார்.

ஆனால் விஜய் சேதுபதி அதை செய்யாமல், தக் லைஃப் காட்டுகிறேன் என காட்டமாக பேசுகிறார். சரியாகவோ அல்லது தவறாகவோ விளையாடும் முத்துக்குமரனை கேள்வி கேட்பது எந்த வகையில் சரியாக இருக்கும் எனப் பேச்சுக்கள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

11 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

13 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

19 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

20 hours ago