More
Categories: Biggboss Cinema News television

கிஸ் கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்! சரியான பதிலடி கொடுத்த விஜய்சேதுபதி

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. பிரபல பாடகரான தெருக்கூத்து அறிவு பாடிய ஒரு ஆல்பம் பாடலோடு இந்த சீசன் ஆரம்பிக்கப்பட்டது. விஜய்சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கியிருக்கிறார். அதுவரை எப்படி விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்தது.

ஆனால் முதல் நாளே நிகழ்ச்சிக்கு எண்ட்ரி கொடுத்த அனைத்து போட்டியாளர்களிடமும் ஒரு வித பயத்தை காட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. இன்னொரு பக்கமும் ரசிகர்களையும் வாயடைக்க செய்திருக்கிறார். கமல் அளவுக்கு விஜய்சேதுபதியால் இந்த நிகழ்ச்சியை கையாள முடியுமா என அனைவருமே சொல்லிக் கொண்டிருந்த நிலையில் தன்னுடைய ஸ்டைலில் முதல் நாளே அனைவருக்கும் ஒரு வித பயத்தை காட்டியிருக்கிறார் நம்ம சேது அண்ணே.

எதார்த்தமான தன்னுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்த விஜய்சேதுபதி உள்ளே வந்த எல்லா போட்டியாளர்களிடமும் சகஜமாக உரையாடியதை பார்க்க முடிந்தது. இதில் நடிகர் ரஞ்சித்தை அவர் வெளுத்து வாங்கிய விதம் மக்களே எதிர்பார்க்கவில்லை. ரஞ்சித்தை பொறுத்தவரைக்கும் சமீபத்தில் ஜாதி குறித்து அவர் பேசியது தான் பெரும் பேசு பொருளாக இருந்தது.

அதையே நான் பேசியது தப்புதான் என சொல்ல வைத்து விட்டார் விஜய்சேதுபதி. இந்த நிலையில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான செல்லமே சீரியலில் லீடு ரோலில் நடித்தவர்களான அர்னவ் மற்றும் அன்ஷிதா ஆகிய இருவருமே போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கிறார்கள் ஏற்கனவே அர்னவ் அவருடைய மனைவியான திவ்யா இருவருக்குமே இடையே நடந்த பிரச்சினை சோசியல் மீடியாவில் கொளுந்து விட்டு எரிந்தது.

இதில் அர்னவ் கைதுசெய்யப்பட்டு பின் வெளியே வந்த செய்தியும் அனைவரும் அறிந்த ஒன்று. மேலும் அர்னவ் அன்ஷிதாவுடனான பழக்கத்தால்தான் திவ்யாவுடன் பிரச்சினை ஏற்பட்டது என்றும் பல செய்திகள் வெளி வந்தன. இப்போது அதே ஜோடிதான் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் எண்டிரியாகியிருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று அர்னவ் மேடையில் ஏறியதும் அவருடைய ஸ்ட்ரேட்டஜி குறித்து விஜய்சேதுபதியிடம் கூறினார்.

அதாவது தான் ஸ்ட்ரைட் ஃபார்வர்டு என்றும் என்னை மாதிரியே உள்ளே ஒரு ஆள் இருந்தால் கண்டிப்பாக முட்டி மோதிப் பார்ப்பேன் என்றும் அர்னவ் கூறினார். அதுமட்டுமில்லாமல் சண்டக் கோழி மாதிரி மோதிக்க வேண்டியதுதான், என்னண்ணே ஆம்பள.. விட்டுருவோமா? என்று அர்னவ் கூற விஜய்சேதுபதி உடனே ‘தைரியத்துல என்ன ஆம்பள பொம்பளனு’என அர்னவை மடக்கி கேள்வி கேட்டார்.

மேலும் விஜய்சேதுபதியிடம் ஒரு முத்தம் வேண்டும் என அர்னவ் கேட்க விஜய்சேதுபதியும் அருகே வந்து முத்தம் கொடுக்க வந்தார். அதை மறித்து மேலும் அர்னவ் ‘இல்லண்ணே நீங்கள் எல்லாருக்கும் முத்தம் கொடுத்துட்டே இருப்பீங்க.. எனக்குத்தான் இதுவரை கொடுக்கவே இல்ல.. கேட்கிற இடத்துல நானும் இல்ல.. கொடுக்கிற இடத்துல நீங்களும் இல்ல’ என கூறினார்.

உடனே விஜய்சேதுபதி அர்னவிடம் ‘ நான் உங்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் சொல்லட்டுமா? உங்க வாழ்க்கையில நல்லது நடக்குறப்போ ஏதாவது பேசி கெடுத்துருவீங்க.. ஜாக்கிரதையா இருங்க’ என சொல்லி அனுப்பினார் விஜய்சேதுபதி

Published by
ராம் சுதன்

Recent Posts