பிக்பாஸ் சீசன் 8 தற்போது சமூகவலைத்தளங்களில் சக்கை போடு போட்டு வருகிறது. 18 போட்டியாளர்களில் ரவீந்தர் முதல்வாரத்தில் வெளியேறினார். 2வது வாரத்தில் 10 பேர் நாமினேஷன் ஆகி இருந்தனர்.
அவர்களில் அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் மட்டும் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறினார்கள். அவரகளில் தர்ஷா குப்தாவை விஜய்சேதுபதி சேஃப் மோடுக்குக் கொண்டு வந்தார். அர்னவ் சிக்கி சின்னாபின்னமானார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் எலிமினேட் ஆகிறார் என்றால் அது பார்வையாளர்கள் தரும் ஓட்டுகளை வைத்துத் தான். அவர்கள் ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் எப்படி விளையாடுறாங்க? எப்படி நடந்துக்கிறாங்க என்பதைப் பொருத்து ஓட்டுப் போடுகிறார்கள்.
அவர்களுக்குப் பிடித்தமானவர்களைக் காப்பாற்றுகிறார்கள். அதே போல விஜய்சேதுபதியும் குறைவான ஓட்டுகளைப் பெற்ற தர்ஷா குப்தாவைக் காப்பாற்றி விட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு அர்னவ் வெளியேறினார். விஜய் சேதுபதி ‘வீட்டில் இருந்து வெளியேறும் முன் உங்க மனசுல ஏதாவது இருந்தா உங்க ஹவுஸ்மேட்ஸ்கிட்ட கொட்டிட்டு வாங்க’ன்னு சொன்னார். அப்போது எல்லாரிடமும் பிரியாவிடையுடன் பேசி கட்டிப்பிடித்து விடைபெற்றார் அர்னவ்.
அதன்பிறகு அன்ஷிதா கதறி அழ அவரையும் கட்டிப்பிடித்து விட்டு விடைபெற்றார். வெளியில் வந்து விஜய்சேதுபதியை சந்தித்ததும் ‘இப்போ வீட்ல இருக்குற ஒவ்வொருத்தரு பற்றியும் நீங்க அவங்ககிட்ட ஏதாவது சொல்லணும்னா சொல்லுங்க’ன்னு விஜய்சேதுபதி சொல்ல ஒவ்வொருவருக்கும் அட்வைஸ் பண்ணுகிறார்.
அப்போது ‘அட்வைஸ் கொஞ்சம் ஓவரா இருக்கு. லைட்டா பிரண்ட்லியா சொல்லுங்க’ன்னு விஜய்சேதுபதி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே அர்னவ் சொன்னார். ஆனா கடைசியில் உணர்ச்சிவசப்பட்டு ‘என்னங்கடா… டேய்… நீங்க எல்லாம் குரூப்பா சேர்ந்துக்கிட்டு ஜால்ரா போடுறீங்க. உங்ககிட்ட சரியா பேசலன்னதும் ஒதுக்கிட்டீங்க.
பெண்கள் தான் சரியா விளையாடுறாங்க…’ன்னு கோபத்தில் கத்தினார். அப்போது விஜய்சேதுபதி அர்னவைப் பார்த்து ‘வன்மத்தைக் கக்குற இடம் இது இல்லை. இவ்வளவு நேரம் இவர்களுடன் நல்லா பேசிட்டு வெளியே வந்ததும் இப்படி பேசுறது அநாகரிகம். இப்போ இவங்க என்னோட ஹவுஸ்மேட்ஸ். அதை நான் அனுமதிக்க மாட்டேன். நாம மரியாதை கொடுக்குறதுல தான் நமக்கான மரியாதையும் இருக்கும்’ என்று பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்கிறார் விஜய்சேதுபதி.
ரசிகர்களின் மத்தியில் இருந்து கிளாப்ஸ் விழுகிறது. அதில் அர்னவ் ரொம்பவே ஃபீல் பண்ணி அவரது முகமெல்லாம் மாறிப் போனது. அப்புறம் நண்பர்களிடம் பக்குவமாகப் பேசி விடைபெற்றுச் சென்றார்.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…