இப்படியெல்லாம டிரெஸ் போடுவாங்க! பிக்பாஸ் ஆண் போட்டியாளரை வறுத்தெடுத்த வனிதா

by rohini |
vanitha
X

vanitha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது எட்டாவது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு புது தொகுப்பாளராக நடிகர் விஜய்சேதுபதி இருந்து வருகிறார். இதற்கு முந்தைய சீசன்களில் கமல் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனில் விஜய் சேதுபதி இறங்கியிருக்கிறார்.

இதுவே ரசிகர்களிடம் ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை விஜய்சேதுபதியும் அக்டோபர் 6ஆம் தேதி பூர்த்தி செய்தார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அவருடைய எதார்த்தமான பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். முதல் நாளே போட்டியாளர்களை அவர் கையாண்ட விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

எந்தவொரு பதற்றமும் இல்லாமல் தடுமாற்றமும் இல்லாமல் நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தினார் விஜய்சேதுபதி. எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில்தான் முழுவதுமாக விஜய் டிவி ப்ராடக்ட் அதிகம் பேர் உள்ளே போயிருக்கிறார்கள். சுனிதா, அன்சிதா, ஜாக்குலின், தீபக், சத்யா, அர்னவ் என பெரும்பாலானோர் விஜய் டிவியில்தான் பணிபுரிந்து வருகிறார்கள்.

இவர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதுவரை ரிவியூவ் செய்து வந்தவரும் தயாரிப்பாளருமான ஃபேட்மேன் ரவீந்திரனும் போட்டியாளராக உள்ளே சென்றிருக்கிறார். மேலும் திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரஞ்சித்தும் ஒரு போட்டியாளராக உள்ளே சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை வனிதா ஒரு ஆண் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டிற்குள் அணியும் டிரெஸ் பற்றி விமர்சனம் செய்துள்ளார். அவர் வேறு யாருமில்லை. நடிகர் சத்யாதான். பிரபல சினிமா பாடகியான ரம்யாவின் கணவர்தான் சத்யா. இவர் எப்போதுமே உடற்பயிற்சி செய்து கொண்டும் தன் உடம்பை கட்டுமஸ்தாக வைத்துக் கொண்டும்தான் இருப்பார்.

ஆணழகன் போட்டியில் பங்குபெற்று பரிசுகளையெல்லாம் வாங்கியிருக்கிறார். இவர் அணியும் டிரெஸ் பற்றித்தான் வனிதா விமர்சித்துள்ளார். அதாவது பெண்கள் அணியும் டிரெஸ் ஆண்களுக்கு ஒருவித தூண்டுதலை ஏற்படுத்துகிறது என்றால் ஆண்கள் போடும் டிரெஸ்ஸில் ஆபாசம் இல்லையா? பெட் ரூமில் போடும் டிரெஸ்லாமாவா இங்கே போடுவீங்க என சத்யா அணியும் டிரெஸ் பற்றி வனிதா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Next Story