பெண்களை நம்ப வச்சு கடைசியில் ஏமாத்தணும்… கேவலமான அட்வைஸ் கொடுத்த அர்னவ்

by Akhilan |
பெண்களை நம்ப வச்சு கடைசியில் ஏமாத்தணும்… கேவலமான அட்வைஸ் கொடுத்த அர்னவ்
X

Arnav: சின்னத்திரை நடிகர் அர்னவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அறிவுரைகளால் தற்போது மீண்டும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

சின்னத்திரையில் சில சீரியல்கள் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் அர்னவ். பெரிய புகழ் இல்லாத இவருக்கு மொத்தமாக விமர்சனங்களை குவித்தது இவருடைய திருமண சர்ச்சையில் தான். சின்னத்திரை நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அதை வெளியில் கூறக்கூடாது என அவரை கட்டாயப்படுத்தி காதலர்கள் போலவே இருவரும் வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் செல்லமா சீரியலில் நடிகை அன்சிதா உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதை திவ்யா தட்டி கேட்க தன்னுடைய மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து திவ்யா இந்த பிரச்சனையை புகாராக வெளியில் எடுத்து வந்தார். இதை தொடர்ந்து அர்னவ் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில் தன்னுடன் கிசுகிசுக்கப்பட்ட அன்ஷிதாவுடன் பிக்பாஸ் வந்திருக்கிறார்.

இதுவே தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களை கிளப்பி விட்டிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க அறிமுக விழாவிலேயே விஜய் சேதுபதியின் முன் ஆம்பளைல என கெத்தாக பேசி பல்பு வாங்கினார். வீட்டிற்குள் வந்த ஆர்னவ் முதல் நாள் அமைதி காத்தார்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து தன்னுடைய வன்மத்தை கொட்டி வருகிறார். அந்த வகையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரண்டு குழுக்களாக இருக்கின்றனர். இதில் ஆண் குழுவிற்கு பிரதிநிதியாக இருக்கும் முத்துக்குமாரிடம் நீ எப்பொழுதுமே பெண்களை முழுமையாக நம்ப வைக்க வேண்டும்.

நம்பிக்கை வர வைக்க வேண்டும். கடைசி நேரத்தில் நீ ஆண்களுக்காக தான் இருந்தாய் என புரிய வைக்க வேண்டும். எந்த சமயத்திலும் பெண்களுக்கு நில்லு. நமக்கு நேரம் வரும் போது அவர்களிடம் ஆண்களுக்காக தான் இருந்ததாக சொல்ல வேண்டும் என்கிறார்.



தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில், சொந்த வாழ்க்கையில் திவ்யாவை ஏமாற்றிவிட்டு தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் பெண்களை ஏமாற்ற கூறுகிறார் அர்னவ் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.

Next Story