பாலா வெளியே அப்படி பொளக்குறாரு!.. சாச்சனாவை சாட்சிக்கு அழைத்து சீன் போடும் ரவீந்தர்!..

by saranya |   ( Updated:2024-10-12 04:30:57  )
பாலா வெளியே அப்படி பொளக்குறாரு!.. சாச்சனாவை சாட்சிக்கு அழைத்து சீன் போடும் ரவீந்தர்!..
X

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக கலந்து கொண்ட பேட்மேன் ரவீந்தரை மோசடி பேர்வழி என பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆன பாலாஜி முருகதாஸ் சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். தனக்கு சொல்லப்பட்ட படத்தின் கதையை உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு சொல்லி அவர்களையும் அவர் ஏமாற்றி வருகிறார் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் ரவீந்தருக்கு பல போட்டியாளர்கள் ஃபேக் என்கிற ஸ்டிக்கரை முகத்தில் ஒட்டி உள்ளனர். அதுதொடர்பாக பேசிய ரவிந்தர் வெளியே நிகழ்ச்சியை பார்த்துவிட்டு உள்ளே வந்திருக்கும் சாச்சனா எனக்கு ஸ்டிக்கர் ஒட்டவில்லை. அதன் மூலமாகவே தெரிகிறது நான் ஃபேக்கான நபர் இல்லை. எனக்கு அது போதும் என ரவீந்தர் கூறியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து 24 மணி நேரத்தில் வெளியேறிய சாச்சனா மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில், ஆண்கள் போட்டியாளர்கள் பற்றி பெண்களிடம் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார். சாச்சனா ஏதோ சிறப்பாக விளையாடுவது போல சீன் போடுகிறார். ஆனால், மீண்டும் அவரை அழவைத்து தான் ரசிகர்கள் வெளியே அனுப்ப போகின்றனர் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சாச்சனா இனிமேலாவது அவசரப்படாமல் தனது கேமை தனிப்பட்ட முறையில் விளையாட வேண்டும் பெண்கள் அணியுடன் சேர்ந்து கொண்டு விளையாடுகிறேன் என நினைத்தால் நிச்சயம் மீண்டும் அவரை பலியாடு ஆக்கி விடுவார்கள் என்கின்றனர்.

ரவீந்தர் ஃபேக்கான நபர் என முத்திரைக் குத்தப்பட்ட நிலையில், இந்த வாரம் அவர் வீட்டை விட்டு வெளியே வருவாரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

Next Story