இன்னும் ரொமான்ஸை ஸ்டார்ட் பண்ணவே இல்லை!.. அதுக்குள்ள காதல் ஜோடியை பிரிக்கலாமா பிக் பாஸ்?..

by saranya |   ( Updated:2024-10-16 16:30:07  )
இன்னும் ரொமான்ஸை ஸ்டார்ட் பண்ணவே இல்லை!.. அதுக்குள்ள காதல் ஜோடியை பிரிக்கலாமா பிக் பாஸ்?..
X

விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது. முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரவீந்தர் சந்திரசேகர் வெளியேறினார். அவருக்கு முன்னதாக ஒரே நாளில் சாச்சனாவை வெளியேற்றிய பிக்பாஸ் மீண்டும் அவரை உள்ளே அனுமதித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற போகின்றனர் என்பதுதான் தற்போது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த வாரம் ஒட்டுமொத்தமாக நாமினேட் ஆகியுள்ளனர்.

தர்ஷா குப்தா, சௌந்தர்யா, விஜே விஷால், ஜாக்குலின், ஜெஃப்ரி, அர்ணவ், ரஞ்சித், தீபக், முத்துக்குமரன் மற்றும் சாச்சனா என மொத்தமாக 10 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இதில் ஏற்கனவே சாச்சனா வெளியேற்றப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி மீண்டும் வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் சாச்சனா இப்போதைக்கு வெளியேற மாட்டார் என தெரிகிறது.

ஜெஃப்ரி, தர்ஷா குப்தா மற்றும் அர்னவ் உள்ளிட்ட மூன்று போட்டியாளர்கள் தான் கடைசி மூன்று இடங்களில் எவிக்டாகும் விளிம்பில் உள்ளனர். அதிலும், அன்ஷிதாவின் காதலரான அர்னவ் வீட்டில் பெரிதாக விளையாடாமல் ஜொள்ளு பார்ட்டியாக உள்ள நிலையில், அவரை மக்கள் வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 பேர் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்சன் வைத்தால் நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story