Bigg boss Tamil: தீபாவளிக்கு பிக்பாஸோட பரிசு இதானாம்.... வைல்டு கார்டு என்ட்ரி... லிஸ்ட்டைப் பாருங்க..!
பிக்பாஸ் சீசன் 8 ஆரம்பித்து விறுவிறுப்பாகப் போய்க் கொண்டு இருக்கிறது. விஜய்சேதுபதி தன்னோட பாணியில அசத்தலாக பிக்பாஸை நடத்தி வருகிறார்.குறிப்பாக பெண்கள் அணியினர் டாஸ்க்கில் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக ஒரு டாஸ்க்கில் கீழே யார் கிடக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ஏறி மிதித்து அது படக்கூடாத இடத்தில் எல்லாம் பட்டு ஒரே ரணகளமாக்கி விட்டார் தர்ஷாகுப்தா.
அப்புறம் 'வேணும்னே மிதிக்கல'ன்னு அவர் சொல்றாரு. இன்னொருத்தர் 'தெரிஞ்சி மிதிச்சாலும் தெரியாம மிதிச்சாலும் தப்பு தான்'னு சொல்றாரு.
அடிபட்ட ரஞ்சித்தோ 'நீ என்ன வேணும்னா மிதிச்ச'ன்னு அவரிடம் வலியோடு கேட்கிறார். ஆணும், பெண்ணும் கட்டிப்புரண்ட சம்பவங்களும் இந்த டாஸ்க்கில் அரங்கேறியது. என்னமோ போங்க பாஸ்னு சொல்றாப்ல தான் இருக்கு இந்த பிக்பாஸ்.
தற்போது ரவீந்தர், அர்னவ் வெளியேறியதும் மொத்தம் 16 போட்டியாளர்கள் இருக்காங்க. இப்போ பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அடிச்சது லக்கி பிரைஸ்னு சொல்லலாம். வைல்ட் கார்டு என்ட்ரி இருக்குதாம்.
கடந்த சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாகப் போன அர்ச்சனா தான் கடைசில டைட்டில் வென்றார். அதனால இது ரொம்ப ரொம்ப முக்கியமான தருணம்.
யாருக்கு எல்லாம் அடிக்குது அந்த அதிர்ஷ்டம்னு பார்க்கலாமா.... இதுல இன்னொரு சஸ்பென்ஸ்சும் வைத்துள்ளனர். ஆரம்பத்தில் பிக்பாஸ்சீசனுக்குத் தேர்வானவர்களில் ஒரு சிலரை வெயிட்டிங்கில் வைத்துள்ளார்களாம்.
அவர்களைக் கூட வைல்டு கார்டு என்ட்ரியில் அனுப்பலாம்னு சொல்றாங்க. அப்படிப் பார்த்தால் அந்த வகையில், அதிர்ஷ்டம் ஐஸ்வர்யா, ரோஷன்னு சில பெயர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அதே போல வைல்டு கார்டு என்ட்ரியாக அர்னவின் மனைவி திவ்யாவிடமும் பேசியுள்ளதாகத் தெரிகிறது.
ஆரம்பத்துல இருந்து கேட்டாங்களாம். அவர் தான் நோ சொல்லிட்டாராம். பிக்பாஸைப் பொருத்தவரை ஆண்கள் தான் குறைவாக இருக்கிறார்கள். அதனால் வைல்டு கார்டு என்ட்ரியில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இன்னும் ஒரு சில தினங்களில் தீபாவளிக்கு முன்னதாக இது தெரிந்து விடும். திவ்யாவும் வர வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏன்னா அவர் தற்போது நடித்து வரும் செவ்வந்தி தொடரும் முடியும் தருவாயில் உள்ளதாம்.